districts

மதுரை முக்கிய செய்திகள்

தாக்குதல் நடத்திய 12 பேர் கைது

மதுரை,ஜூன் 4- மதுரை திருமோகூரில் பட்டியலின மக்களை தாக்கிய 12 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக ஒத்தக்கடை காவல்துறையிடம்  தண்ட பாணி என்பவர் புகார் அளித்தார் .இந்த புகாரின் அடிப்படை யில் அதே பகுதியை சேர்ந்த மனோஜ்பிரபாகரன், பிரபு,  முகேஷ், ஆகாஷ், நேரு,மாதேஷ், சூர்ய பிரகாஷ், அருண்,  ஸ்ரீகாந்த், வைர பிரகாஷ்,ஆர்ஜூன், சாந்தகுமார், சிவா,  ராஜேந்திரபாண்டி, சந்துரு உள்ளிட்ட 24க்கும் மேற் பட்டோர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டது. இதில் 12 பேரை கைது செய்துள்ளனர்.

இன்றைய நிகழ்ச்சி

சுதந்திரப் போராட்ட வீரர் ரோசாப்பூ துரை என்று  அழைக்கப்பட்ட பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் அவர்களின் 136வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு சிறுபான்மை  மக்கள் நலக்குழு சார்பில் ஜூன் 5 காலை 9 மணிக்கு   மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி. யானைக்கல் காந்தி சிலை அருகில். பங்கேற்பு: சட்டமன்ற உறுப்பினர் மு.பூமி நாதன், துணைமேயர் டி.நாகராஜன் .அருட்தந்தையர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர். 

தோழர் எஸ். ராமசாமி காலமானார்

மதுரை, ஜூன் 4-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மேலூர்  தாலுகா கீழையூர் கட்சி கிளைச்செயலாளர் தோழர் எஸ்.  இராமசாமி என்ற மனோகரன் (59) காலமானார். அன்னா ரது மறைவு செய்தி அறிந்து கட்சியின் மேலூர் தாலுகா  எம்.கண்ணன் மற்றும் தாலுகாக்குழு உறுப்பி னர்கள், கட்சியினர் அவரது உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர்.  

நத்தம்: மழையால் வீடு  இடிந்தது 

நத்தம், ஜூன் 4- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மூங்கில்பட்டி பழைய தெருவை சேர்ந்தவர் சந்திரன் (65). இந்த பகுதியில்  நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை  பெய்தது. இதில் இவரது சென்ட்ரிங் வீடு இடிந்து விழுந்தது.  இதில் வீட்டில் இருந்த தொலைக்காட்சி,மின்விசிறி,  பாத்திரங்கள் சேதமடைந்தன. வீட்டில் யாரும் இல்லாத தால்  உயிர்சேதம் ஏற்படவில்லை. மேலும் இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தினர்.

திமிங்கலம் எச்சம் வைத்திருந்த  5 பேர் கைது

விருதுநகர் ஜூன் 4-                    விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் திமிங்க லம் எச்சம் வைத்திருந்த 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.  மான், புலி உள்ளிட்ட வன விலங்குகளோடு நீரில்  வாழும் திமிங்கலமும் அட்டவணையில் உள்ள  விலங்கா கும். இதன் உடல் உறுப்புகள் மற்றும் கழிவுகள், எச்சம்  உள்ளிட்டவைகள் மருத்துவ குணம் வாய்ந்ததாக நம்பப்படுகிறது. மேலும் அரபு நாடுகளில் தயா ரிக்கப்படும் வாசனை திரவியங்களில் திமிங்கல த்தின் எச்சத்தை சேர்க்கும்போது வாசனை திரவியத்தில் உள்ள  வாசம் பல நாட்களுக்கு நீடித்திருக்கும் என கூறப்படு கிறது.  இந்நிலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த அப்துல் ரகுமான், கேரளாவைச் சேர்ந்த பத்மகுமார், விருது நகரை சேர்ந்த  மனோகரன், தர்மராஜ், ராஜமன்னார் ஆகி யோர் திமிங்கலம் எச்சத்தை வைத்திருப்பதாக வனத் துறை சிறப்பு பிரிவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.  வனத்துறை சிறப்பு படை பிரிவு அதிகாரி மனிஷா அலிமா மற்றும் மலர்வண்ணன் தலைமையிலான வனத்துறையினர் திமிங்கலம் எச்சத்தை வைத்திருந்த மேற்படி 5 நபரையும் கைது செய்தனர்.  மேலும், அவர்களிடமிருந்து 2 இரு சக்கர வாகனங்கள் மற்றும் திமிங்கல எச்சத்தையும் பறிமுதல்  செய்தனர். பின்பு அதை திருவில்லிபுத்தூர் வனச்சரகர் வசம் ஒப்படைத்தனர். தொடர்ந்து பிடிபட்ட 5 பேரிட மும் விசாரணை நடத்திய வனத்துறையினர் திருவில்லி புத்தூர் மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2ல் 

பழனியில் புதிய மார்க்கெட்டிற்காக பழைய  கட்டிடங்கள் அகற்றம்

பழனி,ஜூன் 4- பழனியில் ரூ.11.32 கோடியில் நவீன வசதிகளுடன் மார்க்கெட் கட்டிடம் கட்டப்பட உள்ளதால் பழைய கட்டி டங்கள் இடித்து அகற்றப்பட்டன. பழனி நகராட்சி கட்டுப்பாட்டின்கீழ் வ.உ.சி. பேருந்து  நிலையம், காந்தி மார்க்கெட் ஆகியவை செயல்பட்டு வரு கிறது. இதில் மார்க்கெட் கட்டிடம் மற்றும் பேருந்து நிலை யத்தில் டவுன் பேருந்துகள் நிற்கும் நடைமேடை, வணிக  வளாக கட்டிடம் சேதமடைந்து காணப்பட்டது. இதை யடுத்து அவற்றை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட  நகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக  அங்குள்ள கடைக்காரர்களுக்கு மாற்று கடைகள் வழங்க  ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, மார்க்கெட் கடைக்கா ரர்களுக்கு உழவர் சந்தை அருகேயும்,பேருந்து நிலைய  கடைக்காரர்களுக்கு பேருந்து நிலையத்தின் கிழக்கு பகுதியில் உள்ள காலியிடத்திலும் தற்காலிக கடைகள் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.ரூ.11 கோடியே 32 லட்சத்தில் வாகன நிறுத்தம், கழிப்பறை என நவீன வசதி களுடன் காந்தி மார்க்கெட்டுக்கு புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. முதற்கட்டமாக பழைய கட்டிடம் இடித்து அகற்றும் பணி நடந்து வருகிறது.




 

 


 

 

;