districts

img

இராமநாதபுரம் மாவட்டத்தில் 11.52 லட்சம் வாக்காளர்கள்

இராமநாதபுரம், நவ.9-  இராமநாதபுரம் மாவட் டத்தில் 11 லட்சத்து 52 ஆயிரத்து 858 வாக்காளர்கள் உள்ளனர் என்று மாவட்ட வருவாய் அலு வலர் ஆ.ம.காமாட்சி கணேசன் தெரிவித்துள்ளார். இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் நவம்பர் 9 அன்று வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ம.காமாட்சி கணேசன் வெளியிட்டார். பயிற்சி உதவி  ஆட்சியர் நாராயண சர்மா பெற்றுக் கொண்டார். அங்கீக ரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிர முகர்கள் முன்னிலை வகித்த னர். மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ம. காமாட்சி கணேசன் தெரிவிக்கையில், வெளியிடப்பட்ட வரைவு வாக்கா ளர் பட்டியலில், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள 1371 பாகங்களில் 5,73,716 ஆண் வாக்காளர் களும், 5,79,080 பெண் வாக்  காளர்களும் 62 மூன்றாம் பாலி னத்தைச் சேர்ந்தவர்களும் ஆக மொத்தம் 11 லட்சத்து 52  ஆயிரத்து 858 நபர்கள் வாக்கா ளர்களாக உள்ளனர்.பெறப்  பட்ட மனுக்களின் அடிப்படை யில், 3,796 ஆண் வாக்காளர் களும், 4,690 பெண் வாக்கா ளர்களும் 3 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக மொத்  தம் 8,489 நபர்கள் வாக்கா ளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள் ளனர். இதே காலத்தில் பெறப்  பட்ட மனுக்களின் அடிப்படை யில் 12,097 ஆண் வாக்கா ளர்களும், 15,576 பெண் வாக்காளர்களும், 9 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக  மொத்தம் 27,682 வாக்கா ளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ள னர்.

 பரமக்குடி(தனி) தொகுதி யில் 1 லட்சத்து 24 ஆயிரத்து 2 ஆண்கள், 1 லட்சத்து 26 ஆயி ரத்து 394 பெண்கள், இதரர் 23 பேர் என 2 லட்சத்து 50 ஆயிரத்து 419 வாக்காளர்கள் உள்ளனர். திருவாடானை தொகுதியில் 1 லட்சத்து 44 ஆயி ரத்து 581 ஆண்கள், 1 லட்சத்து 44 ஆயிரத்து 668 பெண்கள், இதரர் 21 பேர் என 2 லட்சத்து  89 ஆயிரத்து 270 வாக்கா ளர்கள் உள்ளனர். இராமநாத புரம் தொகுதியில் 1 லட்சத்து 52 ஆயிரத்து 071 ஆண்கள், 1 லட்சத்து 54 ஆயிரத்து 968  பெண்கள், இதரர் 14 பேர் என  3 லட்சத்து 7 ஆயிரத்து 053 வாக்காளர்கள் உள்ளனர். முதுகுளத்தூர் தொகுதியில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 62 ஆண்கள், 1 லட்சத்து 53 ஆயி ரத்து 50 பெண்கள், இதரர் 4 பேர் என 3 லட்சத்து 6 ஆயி ரத்து 116 வாக்காளர்கள் உள்ள னர். மொத்தம் 5 லட்சத்து 73 ஆயிரத்து 716 ஆண்கள், 5 லட்சத்து 79 ஆயிரத்து 80 பெண்கள், இதரர் 62 பேர் என 11 லட்சத்து 52 ஆயிரத்து 858 வாக்காளர்கள் உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டி யலை இந்திய தேர்தல் ஆணை யத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளமான www.elections.tn.gov.in மற்றும் www.nvsp.in - இல் பொதுமக் கள் அனைவரும் சரிபார்த்துக் கொள்ளலாம்.  இளம் வாக்காளர்கள் மற்றும் விடுபட்ட வாக்காளர் களை சேர்ப்பதற்காகவும், தற்போதுள்ள வாக்காளர் பட்டி யலில் திருத்தங்கள் மற்றும் நீக்கம் செய்வதற்கும் எதிர்வரும் நவம்பர் 12, 13, 26 மற்றும் 27 ஆம் தேதி ஆகிய நான்கு தினங்களிலும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன என மாவட்ட வருவாய் அலு வலர் ஆ.ம. காமாட்சி கணே சன் தெரிவித்துள்ளார்.