districts

img

தனியார் மது பார்களை உடனே அகற்றக்கோரி பெரியகுளத்தில் 11 அமைப்புகள் போராட்டம்

தேனி, டிச.24- பெரியகுளத்தில் பெண்கள், குழந்தைகள், மாணவிகள் கூடும்  இடங்களில் செயல்பட்டு வரும் தனி யார் மது பார்களை அகற்ற வலி யுறுத்தி 11 அமைப்புகள் பங்கேற்ற பெருந்திரள் தர்ணா போராட்டம் டிசம்பர் 24 சனிக்கிழமையன்று நடைபெற்றது. பெரியகுளம் நகரில் மூன்றாந் தல் பேருந்து நிறுத்தம், மருத்துவ மனை, வங்கி இருக்கும் இடங்க ளில் தனியார் மதுபான கடை மற்  றும் பார்கள் இயக்கி வருகிறது .மேலும் புதிதாக புதிய பேருந்து  நிலையம் அருகே தனியார் மதுக்  கடையை திறக்க ஏற்பாடு நடை பெற்று வருகிறது. இதனால் பொது மக்களுக்கும், போக்குவரத்திற் கும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ -மாணவிகளுக்கும் பெரும்  இடையூறாக உள்ளது. பெருந்திரள் முறையீடு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதி முக, இந்திய யூனியன் முஸ்லிம்  லீக், எஸ்டிபிஐ, இந்திய தேசிய லீக்,  தமுமுக, பிறர் நலன் நாடுவோர் அறக்கட்டளை, ஐமுமுக உள்ளிட்ட 11 அமைப்புகள் சார்பில் போராட்  டம் நடைபெற்றது. போராட்டத் திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பெரியகுளம் தாலுகா செயலாளர் எம்.வி.முருகன் தலைமை வகித் தார். விசிக நகர் செயலாளர் ஆ. ஜோதி முருகன் ,மதிமுக நகர் செய லாளர் ந.சோலையப்பன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். விடு தலை சிறுத்தைகள் கட்சி தேனி  நாடாளுமன்ற தொகுதி செயலாளர்  இரா.தமிழ்வாணன் உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், திண்டுக்கல் தொகுதி  முன்னாள் சட்டமன்ற உறுப்பினரு மான கே.பாலபாரதி நிறைவுரை யாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம்.ராமச்சந்திரன்,எஸ். வெண்மணி, மாவட்டக்குழு உறுப்  பினர்கள் எஸ். ராமச்சந்திரன், பி.  இளங்கோவன், பிரேம்குமார், விசிக தேனி மாவட்ட செயலாளர் ப.நாகரத்தினம் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டு முழக்க மிட்டனர்.

பார் அனுமதியை ரத்து செய்க: கே.பாலபாரதி வலியுறுத்தல் 

போராட்டத்தில் கலந்து கொண்டு கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் கே.பாலபாரதி பேசியதாவது: பெரியகுளத்தில் அரசு டாஸ்மாக் கடை ஒரு காலத்  தில் பொதுமக்களுக்கு பெரும் துய ரத்தை கொடுத்தது . மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து நடத்  திய போராட்டத்தால் அந்த மதுக் கடை மூடப்பட்டது .பெரியகுளம் நகரம் அரசு மதுக்கடை இல்லாத நகரமாக இருந்தது. தற்போது நக ரில் 3 தனியார் மதுக்கடை இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்து கிறது. பொதுமக்கள், பள்ளி, கல் லூரி மாணவ -மாணவிகள் கூடும் இடங்கள், பேருந்து நிலையத்தில் தனியார் மதுபான பார்கள் நடத்த உரிமம் வழங்கப்பட்டுள்ளது. கடைகளை திறப்பதற்கு முன்னர் அரசியல் கட்சி தலைவர்களை அழைத்து அவர்களின் ஆலோச னையை பெற்ற பின்னர் அனு மதித்திருக்கலாம். மாவட்ட ஆட்சி யர் உடனடியாக தலையிட்டு பெரிய குளத்தில் உள்ள 3 தனியார் பார் களுக்கு கொடுத்த அனுமதியை ரத்து செய்து விட்டு வேறு இடத் திற்கு மதுக்கடையை மாற்ற வேண் டும். இவ்வாறு அவர் பேசினார்.