districts

img

தேனி மாவட்டத்தில் 11 லட்சத்து 6 ஆயிரம் வாக்காளர்கள்

தேனி, நவ.9- தேனி மாவட்டத்தில் மொத்தம் 11 லட்  சத்து 6 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம் என்று நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. வரும் ஜனவரி முதல் தேதியை தகுதிநாளாகக் கொண்டு இத்தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் க.வீ.முரளீதரன் புதனன்று வெளி யிட்டார். ஆண்டிபட்டி தொகுதியில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 566 ஆண்கள், 1 லட்சத்து 37ஆயிரத்து 999 பெண்கள்,இதரர் 33 என 2 லட்சத்து 72 ஆயிரத்து 598 வாக்கா ளர்கள் உள்ளனர். பெரியகுளம் தொகுதி யில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 898 ஆண்கள்,  1 லட்சத்து 43 ஆயிரத்து 262 பெண்கள், இதரர் 104 பேர் என 2 லட்சத்து 81 ஆயிரத்து 264 வாக்காளர்கள் உள்ளனர். போடி சட்ட மன்றத் தொகுதியில் 1 லட்சத்து 32 ஆயி ரத்து 587ஆண்கள், 1 லட்சத்து 38 ஆயிரத்து 778 பெண்கள், இதரர் 22 பேர் என 2 லட்சத்து 71 ஆயிரத்து 387 வாக்காளர்கள் உள்ளனர். கம்பம் சட்ட மன்றத் தொகுதியில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 360 ஆண்கள், 1 லட்சத்து 43 ஆயிரத்து 592  பெண்கள், இதரர் 34 என 2 லட்சத்து 80 ஆயிரத்து 986 வாக்காளர்கள் உள்ளனர்.மொத்தம் 5 லட்சத்து 42 ஆயிரத்து 411 ஆண்கள், 5 லட்சத்து 63 ஆயிரத்து 631 பெண்கள், இதரர் 193 என 11 லட்சத்து 6 ஆயிரத்து 235 பேர் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தி.சுப்பிரமணியன், பெரிய குளம், உத்தமபாளையம் கோட்டாட்சி யர்கள் கி.சிந்து, ரா.பால்பாண்டி, தேர்தல்  வட்டாட்சியர் செந்தில்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் பார் வைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆகவே வாக்காளர்கள் இனை சரிபார்த்து தங்க ளது பெயர், சரியான விவரத்துடன் இடம்  பெற்றுள்ளதாக என்பதை உறுதி செய்து கொள்ளலாம். 18 வயது பூர்த்தி அடைந்த புதிய வாக்கா ளர்கள், பெயர் விடுபட்டவர்கள் உரிய ஆவ ணங்களுடன் பெயர் சேர்க்கைக்கு விண்  ணப்பிக்கலாம் என்று தேர்தல் அதிகாரி கள் தெரிவித்தனர்.