districts

img

விலை உயர்வு, வேலையின்மைக்கு எதிர்ப்பு மோடி அரசை கண்டித்து இடதுசாரிகள், விசிக ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், மே 26-  பெட்ரோல், டீசல், சமையல் எரி வாயு விலை உயர்வு, வேலை யின்மை, வெறுப்பு அரசியல், மோடி அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்.எல்)லிபரேஷன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் டெல்டா  மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செய லாளர்கள் சிபிஎம் பி.ரமேஷ், சிபிஐ வீ.ஞானசேகரன், விசிக தமிழ் மாணிக்கம் ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், தோழமை கட்சியி னர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் அவுரி திடலில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத் தில் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் கண்டன உரையாற்றினார். மாவட்டச் செயற் குழு உறுப்பினர் எம்.முருகையன் கலந்து கொண்டனர்.  கீழ்வேளூர் கடைத்தெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் நாகை மாவட்டச் செயலா ளர் வி.மாரிமுத்து கண்டன உரை யாற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.எம்.அபுபக்கர் கலந்து கொண்டனர். கீழையூர் கடைத்தெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பி னரும், சிபிஐஎம் மாநிலக் குழு உறுப் பினருமான வி.பி.நாகைமாலி கலந்து கொண்டு கண்டன உரை யாற்றினார்.
தஞ்சாவூர் 
தஞ்சாவூர் ஒன்றியம் வல்லம் கடைவீதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றி யச் செயலாளர் கே.அபிமன்னன், சிபிஐ ஒன்றியச் செயலாளர் ஜார்ஜ் துரை, விசிக ஒன்றியச் செயலாளர் வினோத் தலைமை வகித்தனர். இதேபோல், பேராவூரணி ரயில் நிலையம், ஊரணிபுரம், திருவை யாறு உள்ளிட்ட இடங்களில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சி ஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், தோழமை கட்சியினர் கலந்துகொண்டனர்.
குடவாசல்
நன்னிலம் ஒன்றியம் பேர ளத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சிபிஎம் ஒன்றிய செயலா ளர்கள் கே.எம்.லிங்கம், சிபிஐ ஒன்றிய செயலாளர் எஸ்.செந்தில் ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் மாநிலக் குழு உறுப்பி னர் ஐ.வி.நாகராஜன், சிபிஐ மாநி லக்குழு தீன.கௌதமன், விசிக மாவட்ட துணை செயலாளர் கோவி. கணேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் தோழமை கட்சியினர் கலந்து கொண்டனர். இதேபோல் குடவாசல், வலங்கைமான், கொரடாச்சேரி ஆகிய ஒன்றியங்களிலும் கூட்டி யக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி அடுத்த ஆயப்பா டியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவா சன் தலைமையிலும், ஆக்கூரில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ப.மாரியப்பன் தலைமையிலும், மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.துரைராஜ் தலைமை யிலும், குத்தாலம் கடைவீதியில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.விஜயகாந்த் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் 
திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ மாவட்டச் செயலாளர் வை.சிவபுண்ணியம், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, விசிக மாநில துணை பொது செயலாளர் சா. ரஜினிகாந்த் ஆகியோர் தலைமை வகித்தனர்.  ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ மாநி லக்குழு உறுப்பினர் பி.எஸ்.மாசி லாமணி, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், விசிக தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.பூபாலன், உள்ளிட்ட தோழமை கட்சியினர் பங்கேற்றனர்.

;