districts

img

பெரம்பலூரில் புத்தகத் திருவிழா நடத்த வேண்டும் தமுஎகச மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

பெரம்பலூர், ஜூன் 26 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்க பெரம்பலூர் மாவட்ட 8-வது மாநாடு, பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனை கூட்ட அரங்கில் சனிக்கிழமை நடை பெற்றது. மாநாட்டுக்கு தமுஎகச மாவட்டச் செயலாளர் செல்வகுமார் தலைமை வகித்தார். அரும்பாவூர் வசந்தன் தொகுத்த  பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தா ளர்கள் வெளியிட்ட புத்தகங்களின் கண்காட் சியை மருத்துவர் சி.கருணாகரன் திறந்து வைத்து மாநாட்டை துவக்கி வைத்தார்.  தொடர்ந்து திருவாளந்துறை கலைவா ணன் வரைந்த ஓவியக் கண்காட்சியினை முனைவர் ம.செல்வபாண்டியன் திறந்து வைத் தார். தலித் படைப்புகள் குறித்த கருத்தரங் கத்துக்கு கவிஞர் யாழன் ஆதி தலைமை வகித்தார். மாநாட்டில் மாவட்டத் தலைவர் அகவி, மௌனன் யாத்திரிகா, உதவி பேரா சிரியர் ஸ்ரீதர், முதுகலை ஆசிரியர் சிலம்பரசன்  ஆகியோர் தலித் கவிதை, சிறுகதை, நாவல்  ஆகிய தலைப்பின்கீழ் கருத்துரை வழங்கி னர்.  சங்கத்தின் மாவட்டச் செயலாளர் செல்வ குமார் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். மாநில செயற்குழு உறுப்பினரும், திரைப்பட பாடலாசிரியருமான கவிஞர் ஏகாதசி நிறை வுரை ஆற்றினார். இதில், கவிஞர் சத்திய நேசன், சிவக்குமார் பரிவர்த்தனா, யாழினி, கருணைவேந்தன் ஆகியோரின் இசையும் பாடலும் நிகழ்ச்சி நடந்தது. பேராசிரியர் கும ணன் தொகுத்து வழங்கினார்.

 பெரம்பலூரில் மாவட்ட நிர்வாகம் மீண்டும்  புத்தகத் திருவிழாவை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில், தேர்ச்சி சத வீதத்தில் மாநில அளவில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற உழைத்த மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்வது. பெரம்பலூர் மாவட்ட கலைஞர்கள், எழுத்தாளர்களின் கலைத்திறன் செயல்பாடுகளை நடத்த பொது  வெளி அரங்க மேடை ஒன்றை மாவட்ட நிர்வா கம் அமைத்து தர வேண்டும். பள்ளி-கல்லூரி மாணவர்களிடையே கலைத் திறனை வளர்க்கும் நோக்கில் அவர் களுக்கு ஆண்டுதோறும் கலை எழுத்துத் திறன் போட்டிகள் நடத்த வேண்டும். பள்ளி களில் இலக்கிய மன்றம், நூலகம் ஆகிய வற்றின் செயல்பாடுகளை புனரமைத்து நன்முறையில் செயல்படுத்த வேண்டும். உல களவில் பெரம்பலூரின் தொல்லியல் பெரு மையை வெளிப்படுத்தும் பொருட்டு, பெரம்ப லூரை தொல்லியல் ஆய்வு பகுதியாக அறி வித்து, தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ள  ஒன்றிய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது என்பன உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாவட்ட பொருளாளர் ராமர்  வரவேற்றார். முடிவில் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

;