districts

சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களையும் கோவில் திருவிழாவில் சேர்க்க வேண்டும் சமாதானக் கூட்டத்தில் வட்டாட்சியர் உத்தரவு

பொன்னமராவதி, செப்.19 - பொன்னமராவதி அருகே சாதி மறுப்பு திரு மணம் செய்து கொண்ட 25  குடும்பங்களை ஒதுக்கி வைத்த சம்பவத்தில் வட்டாட் சியர் தலைமையில் நடை பெற்ற சமாதான கூட்டத்தில் பாகுபாடு இன்றி கோவில் திருவிழாவில் பங்கேற்க செய்வது என முடிவு செய் யப்பட்டது. புதுக்கோட்டை மாவட் டம் பொன்னமராவதி ஒன்றி யம் நல்லூர் கிராமத்தில் பகவதி அம்மன் கோவில் திருவிழாவின் போது, சாதி  மறுப்பு திருமணம் செய்த  காரணத்தால் 25 குடும்பத் தினரை  தலைகட்டு வரி  வசூல் செய்யாமல் ஊரை  விட்டு ஒதுக்கி வைத்திருந்த னர்.  இதை எதிர்த்து, சாதி  மறுப்பு திருமணம் செய்த  வேலு என்பவர் உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். பொன் னமராவதி வட்டாட்சியர் சமா தான கூட்டம் நடத்தி உரிய  நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந் தது. இந்நிலையில் சனிக் கிழமை பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத் தில், வட்டாட்சியர் பிரகாஷ் தலைமையில் இரு தரப்பும் பங்கேற்ற சமாதான கூட்டம் நடைபெற்றது. இதில் ஒதுக்கி வைக்கப் பட்ட 25 குடும்பத்தினரிடமும் தலைகட்டு வரி வசூல்  செய்வது, திருவிழாவில் அனைத்து வழிபாடுகளை யும் பாகுபாடின்றி நடத்திட செய்வது, திருவிழா நடத் தும் குழுவில் ஒதுக்கி வைக்கப் பட்ட குடும்பத்தினரையும் சேர்த்துக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது.  இந்தப் பகுதியில் அதிக  அளவிலான சாதி மறுப்பு  திருமணங்கள் நடைபெற்றி ருப்பது குறிப்பிடத்தக்கது.

;