districts

img

மக்கள் தொடர்பு முகாம்  

பொன்னமராவதி, டிச.14- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம் தேனூர் வருவாய் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதா  ராமு தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடை பெற்றது.  முகாமில், வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவு துறை, தோட்டக்கலைத் துறை, தொழிலாளர் நலத்துறை வேளாண்மை மற்றும் உழ வர் நலத்துறை,தாட்கோ, மகளிர் திட்டம், மாற்றுத் திற னாளிகள் நலத்துறை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் 1291 பயனாளிகளுக்கு ரூ.2,07,88,607 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார்.  பெண்களுக்கு எதிரான பாலியல் மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிரான பாலின சமத்துவ உறுதிமொழி யினை ஆட்சியர் தலைமையில் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் எடுத்துக் கொண்ட னர்.

;