districts

img

விவசாயிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்குக! விவசாயிகள் சங்க ஒன்றிய மாநாடு வலியுறுத்தல்

அறந்தாங்கி, ஆக.3-  புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி தாலுகா சுப்பிரமணியபுரம் கற்ப கம் அரங்கில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க அறந்தாங்கி ஒன்றிய 12-ஆவது மாநாடு நடைபெற்றது.  மாநாட்டிற்கு விவசாய சங்க ஒன்றி யத் தலைவர் எம்.மேகவர்ணம் தலைமை வகித்தார். எம்.தர்மராஜ் வர வேற்று பேசினார். ஒன்றியச் செயலாளர்  எம்.நாராயண மூர்த்தி வேலை  அறிக்கை வாசித்தார். விவசாய சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பொன்னுச் சாமி துவக்கவுரையாற்றினார்.  விவசாய சங்க மாவட்டப் பொருளா ளர் சி.சுப்பிரமணியன், சிபிஎம் தாலுகா  செயலாளர் தென்றல் கருப்பையா, மாவட்டக் குழு உறுப்பினர் தங்கராஜ், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் கர்ணா, நகரச் செயலாளர். கணேசன், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் சரோஜா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விவ சாய சங்க மாவட்டத் தலைவர் ஏ.ராமை யன் விளக்கிப் பேசினார். மாநாட்டில், ஒன்றியத் தலைவராக எம்.மேகவர்ணம், செயலாளராக எம்.நாராயண மூர்த்தி, பொருளாளராக சீனி வாசன், துணை தலைவராக செல்வ குமார், துணை செயலாளராக சாத்த குமார் உள்ளிட்ட 12 பேர் கொண்ட ஒன்றிய குழு தேர்வு செய்யப்பட்டது.  மாநாட்டில், ஒன்றிய அரசு வேளாண்  விஞ்ஞானி சுவாமிநாதன் குழு பரிந்து ரையை அமல்படுத்த வேண்டும். விவ சாய விலை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை உத்தரவாத சட்  டத்தை நிறைவேற்ற வேண்டும். விவ சாயிகளுக்கு தட்டுபாடின்றி உரம் பூச்சி மருந்து கிடைத்திட நடவடிக்கை எடுக்க  வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் விவ சாயிகள் அனைவருக்கும் வட்டி இல்லா  கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய பணிகளுக்கு தட்டு பாடின்றி மின்சாரம் கிடைக்க வேண்டும். நாகுடி, அத்தாணி, சுப்பிரமணியபுரம் பகுதிகளில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்  பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் தென்னங் கன்றுகள் வழங்கப்பட்டன.

;