districts

புதுக்கோட்டை மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலக முற்றுகைப் போராட்டம் ஒத்திவைப்பு

பொன்னமராவதி, மார்ச் 20- ஒரு வாரத்தில் மின் இணைப்பு அளிப்பதாக மின்சார வாரிய அதி காரிகள் உறுதி அளித்ததன் பேரில்  சிபிஎம் சார்பில் நடைபெற இருந்த புதுக்கோட்டை மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலக  முற்றுகைப் போராட்டம் தற்காலி கமாக ஒத்திவைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்  னமராவதி தாலுகா கொன்னை யம்பட்டி ஊராட்சி மேட்டுப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் வெள்  ளக்கண்ணு-ஆண்டிச்சி தம்பதி களின் வீட்டு சொத்து பிரச்சனை யை காரணம் காட்டி, மின்சாரத்  துறையில் மனு கொடுத்து, மின்சா ரத்தை துண்டித்ததால் ஒரு வருட காலமாக வெள்ளக்கண்ணுவின் குழந்தைகளின் கல்வி பாதிக் கப்பட்டுள்ளது. மின்சார துறையில் பணிபுரிந்து கொண்டு உள்நோக்கத்துடன் மின்  இணைப்பு வழங்க மறுக்கும் கம லக்கண்ணன், பெரியசாமி மற்றும்  காரையூர் மின்சார துறை அதிகாரி  ஆகியோர்களை கண்டித்தும் உட னடியாக மின் இணைப்பு வழங்கிட வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மார்ச் 21 (செவ்வாய்க்கிழமை) அன்று புதுக்கோட்டை மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலக முற்றுகை போராட்டம் மாவட்ட செயலாளர் கவிவர்மன் தலைமை யில் நடைபெறும் என அறிவிக் கப்பட்டிருந்தது.  இந்நிலையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஒரு வாரத்தில் வெள்ளக்கண்ணுவின் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனால், முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக கட்சியின் ஒன்  றிய செயலாளர் பக்ருதீன் தெரி வித்துள்ளார்.

;