districts

மகனை அடித்துக் கொன்ற பெற்றோர் கைது

புதுக்கோட்டை, ஜூன் 16 - புதுக்கோட்டையில் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்த, குற்றப் பின்னணி கொண்ட தனது மகனை,  பெற்றோர் அடித்துக் கொன்ற  வழக்கில்  முறையாக விசாரிக்காமல், தற்கொலை  என வழக்குப் பதிவு செய்த காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகிய இருவரும் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை காமராஜபுரம் 28  ஆவது வீதியைச் சேர்ந்தவர் கணேசன்  (52). இவரது மனைவி தனம் (47). இவர் களின் மகன் வீரமணி (24).

இவர் மீது கஞ்சா, திருட்டு உள்ளிட்ட  வழக்குகள் காவல் நிலையங்களில் விசாரணையில் உள்ளன. இதில், நமண சமுத்திரம் காவல் நிலையத்தில் வீரமணி மீது பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்கில் கடந்த 5 நாட்களுக்கு  முன்பு போலீசாரால் கைது செய்யப் பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். 

பின்னர் ஜாமீனில் வெளியே வந்த வீரமணி, பெற்றோரிடம் பணம் கேட்டும்,  கைப்பேசி கேட்டும் ஜூன் 13 ஆம் தேதி  இரவு தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அதைக் கொடுக்க மறுத்ததால் பெற்றோரை வீரமணி தாக்கியுள்ளார். பதிலுக்கு பெற்றோரும் வீரமணியைத் தாக்கியுள்ளனர். படுகா யம் அடைந்த வீரமணி அந்த இடத்தி லேயே இறந்துவிட்டார்.

மகனை அடித்துக் கொன்றதை மறைப்பதற்காக வீரமணி உடலை, வீட்டின் மின் விசிறியில் பெற்றோர் தொங்க விட்டு, தற்கொலை செய்து கொண்டதாகக் கூறியுள்ளனர். இதனைத்  தொடர்ந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்த தகவலின் அடிப்படை யில் கணேஷ் நகர் காவல் நிலைய உதவி  ஆய்வாளர் ஓவியா, மருத்துவ மனைக்குச் சென்று விசாரணை நடத்தி னார். அதன்பிறகு, இத்தகவலை கணேஷ் நகர் காவல் ஆய்வாளர் வேலுச்சாமியிடம் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து தற்கொலை என வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில், வீரமணியின் சாவில்  மர்மம் இருப்பது குறித்து மாவட்டக்  காவல் கண்காணிப்பாளர் வந்திதா  பாண்டேவுக்கு தகவல் கிடைத்தது. பின்பு, துணைக் காவல் கண்காணிப்பா ளர் ராகவியிடம் விசாரித்து அறிக்கை அளிக்க அவர் உத்தரவிட்டார்.

அவர் நடத்திய விசாரணையில், வீர மணியை அவரது பெற்றோர் கணேச னும், தனமும் அடித்துக் கொன்றதை ஒப்புக் கொண்டுள்ளனர். வீட்டில் படுக்கை மற்றும் தலையணையில் ரத்தக் கறை இருந்துள்ளது. வீரமணி யின் உடலிலும் காயங்கள் உள்ளன. இவற்றையெல்லாம் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோர்  நேரில் சென்று பார்க்கத் தவறிவிட்டதாக  துணைக் காவல் கண்காணிப்பாளர் ராகவி அறிக்கை அளித்தார்.

இதைத் தொடர்ந்து ஆய்வாளர் வேலுச்சாமியை காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், உதவி ஆய்வாளர் ஓவியாவை ஆயுதப் படைக்கும் மாற்றி  மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே சனிக்கிழமை உத்தர விட்டார்.

இதற்கிடையே மகனைக் கொன்ற  தந்தை மற்றும் தாயும் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

;