districts

img

விலையில்லா மிதிவண்டிகளை சின்னதுரை எம்எல்ஏ வழங்கினார்

புதுக்கோட்டை, அக்.26 - புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோவிலை அடுத்த அண்டக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சி யில் கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிளை வழங்கினார். திமுக வடக்கு  மாவட்ட செயலாளர் கே.கே.செல்லபாண்டி யன், புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவ லர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராம கிருஷ்ணன், குன்றாண்டார் கோவில்  ஒன்றியக்குழுத் தலைவர் பாண்டிச்செல்வி, கே.ஆர்.என்.போஸ் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.