districts

img

ஆவணத்தான் கோட்டை பள்ளிக்கு மேஜைகள் வழங்கல்

அறந்தாங்கி, நவ.10-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் உள்ள ஆவணத்தான் கோட்டை மேற்கு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் இளைஞர்  நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச் சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு  எழுதும் மேஜை மற்றும் அமரும் இருக்கை யை மாணவர்களுக்கு வழங்கினார்.  மேலும் சென்னை எஸ்பியூர் நிறுவனத்தி னரால் பள்ளிக்கு வழங்கப்பட்ட குடிநீர்  சுத்திகரிப்பு இயந்திரத்தினை இயக்கி மாண வர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். மேலும் தமிழக அரசு பள்ளிகளில் இரண்டு ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்ற ஒரே பள்ளி என்பதனை அறிந்து தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.  பள்ளியில் அரசு நியமித்த ஆசிரியர் களை தாண்டி மாணவர்களின் வளர்ச்சிக்கு பணி புரியும் தன்னார்வ ஆசிரியர்களையும் மேலும் அவர்களுக்கு ஊதியம் வழங்கும் நன்கொடையாளர்களையும் வெகுவாக பாராட்டினார்.