districts

மக்காச்சோள படைப்புழுவை இயற்கை முறையில் கட்டுப்படுத்த முடியும்

புதுக்கோட்டை, டிச.22 - மக்காச்சோள படைப்புழுத் தாக்குதலை இயற்கை முறையில் கட்டுப்படுத்த முடியும் என  பிரிட்டிஷ் தூதரக அலுவலர் சாரா பேலன் தெரி வித்துள்ளார்.  புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மறமடக்கி கிராமத்தில் மக்காச்சோளத்தில் படைப் பழு பாதிப்பு மேலாண்மைத் திட்ட சோதனை ஆராய்ச்சித் திட்ட பணிகள் தொடர்பான கருத்த ரங்கம் புதன்கிழமை விவசாயியின் தோட்டத்தில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.ராஜமனோகரி தலைமை வகித்தார். கருத்தரங்கை தொடங்கி வைத்து வேளாண்மை இணை இயக்குநர் மா.பெரியசாமி பேசினார். கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களாக பிரிட்டிஷ் மற்றும் இந்திய அறிவியல் மற்றும் புதுமை  இணைப்புத் தலைவர் சாரா பேலன், புதுமைக்கான ஆலோசகர் சுவாதி சக்சேனா ஆகியோர் பங்கேற்ற னர்.  பின்னர் சாரா பேலன் பேசுகையில், “இந்தியா  மற்றும் பிரிட்டிஷ் நாடுகளுக்கிடையே நல்லுறவை  மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. மக்காச்சோளப் படைப்புழுவை கட்டுப்படுத்த சென்சார் வசதியுடன் மேற்கொள்ளப் பட்டு வரும் சோதனைத் திட்டத்தில் பிரிட்டிஷ் தூதரக மும் ஒரு பங்காளராக இணைந்திருப்பது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.  இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றால் மக்காச் சோளத்தில் படைப்புழு பாதிப்பை இயற்கை முறை யில் கட்டுப்படுத்த முடியும். இது, உலகத்தின் பல்வேறு நாடுகளில் உள்ள விவசாயிகள் மற்றும் வேளாண்மைத் துறையினருக்கும் மிகவும் பயனுள்ள தாக அமையும். எனவே, பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் ஒருங்கிணைந்து இத்திட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார்.  எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் சோதனை ஆராய்ச்சித் திட்டத்தை விளக்கிப் பேசினார். சென்சார் இன கவர்ச்சி பொரி மூலம் ஏற்படும் நன்மை களை விளக்கி வம்பன் தேசிய பயறுகள் வகை ஆராய்ச்சி நிறுவனத்தின் பூச்சியியல் விஞ்ஞானி ராஜா ரமேஷ், புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரி பூச்சிகள் இணைப் பேராசிரியர் எஸ்.வினோத்குமார், வேளாண்மை அலுவலர் முகமது ரபி ஆகியோர் பேசினர். முன்னதாக கள ஒருங்கி ணைப்பாளர் டி.விமலா வரவேற்க, வினோத் கண்ணா நன்றி கூறினார்.

;