districts

img

தலித் மக்களின் குடியிருப்புகளுக்கு பட்டா எம்.சின்னதுரை எம்எல்ஏ வழங்கினார்

புதுக்கோட்டை, ஆக.3-  புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தலித் மக்களின் குடியிருப்புகளுக்கு கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரையின் முயற்சியால் பட்டா பெற்றுக்கொடுக்கப்பட்டது. கந்தர்வகோட்டை ஒன்றியம் அரவம்பட்டி, சவேரியார் பட்டி, முதுகுளம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஆதிதிராவிடர் காலனி குடியிருப்புக்கு 114 பட்டாக்களை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சின்னதுரை அண்மையில் நேரில் சென்று வழங்கினார். இந்நிகழ்வில் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கார்த்திக் ரத்தினவேல், கந்தர்வகோட்டை வட்டாட்சியர் எஸ்.புவியரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;