districts

img

விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை, பிப்.24-  புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற, மெட்ரிக் பள்ளிகளின் இளஞ் செஞ்சிலுவைச் சங்க மாணவர்கள் 1000 பேர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. புதுக் கோட்டை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணி நகர்மன்ற வளாகத்தில் நிறைவடைந்தது.  விழாவில், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே,  மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.அப்துல்காதர் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில், 100 மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த 1000 மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.  தொடர்ந்து மௌண்ட் சீயோன் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  முன்னதாக கவிஞர் தங்கம் மூர்த்தி வரவேற்றார். வட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன், மெட்ரிக் பள்ளிகளுக்கான மாவட்டக் கல்வி அலுவலர் செ.அன்றனி உள்ளிட்டோரும் வாழ்த்திப் பேசினர். மௌண்ட் சீயோன் பள்ளியின் முதல்வர் ஜலஜாகுமாரி உள்ளிட் டோரும் இளஞ் செஞ்சிலுவைச் சங்கத்தின் வரலாறு, நோக்கம், சேவை மனப்பான்மை உள்ளிட்ட விழிப்புணர்வு உரைகளை நிகழ்த்தினர். கலை நிகழ்ச்சிகளும் நடை பெற்றன.

;