districts

கலை பண்பாட்டுத் திருவிழா போட்டிகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை

அறந்தாங்கி, அக்.29 - புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி கல்வி மாவட்ட அளவிலான கலை பண்பாட்டுத் திருவிழா போட்டி கள் புதுக்கோட்டை முதன்மைக் கல்வி  அலுவலக தேர்வுக் கூடத்தில் கடந்த  அக்.19 அன்று தொடங்கி அக்.27 அன்று  முடிவுற்றது. இதில் ஆவுடையார் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். வாய்ப்பாட்டு இசை செவ்வியல் பகவதி ஆண்கள் பிரிவு முதலிடம், ரட்சிகா பெண்கள் பிரிவு இரண்டாம் இடம், வாய்ப்பாட்டு இசை நாட்டுப் புறப் பாடல் மகேஸ்வரன் ஆண்கள் பிரிவு  மூன்றாம் இடம், நடனம் செவ்வி யல் மாதேஷ் ஆண்கள் பிரிவு இரண்டா மிடம், நடனம் நாட்டுப்புறப் பாடல் ஹரிஷ் ஆண்கள் பிரிவு இரண்டாம் இடம், காளீஸ்வரி பெண்கள் பிரிவு மூன்றாம் இடம். காண்கலை இரு பரிமாணம் சிவ ராஜா ஆண்கள் பிரிவு‌ மூன்றாம் இடம்,  அபிநயா பெண்கள் பிரிவு இரண்டாம் இடம், காண்கலை மூன்று பரிமாணம் மாரிமுத்து ஆண்கள் பிரிவு மூன்றாம் இடம், ஈஸ்வரி பெண்கள் பிரிவு முத லிடம், உள்ளூர் தொன்மை பொம்மை கள் செய்தல் ரேணுகா பரமேஸ்வரி (பெண்கள் பிரிவு முதலிடம், கருவி  இசை செவ்வியல் ஸ்ரீநாத் ஆண்கள் பிரிவு முதலிடம், கருவிசை நாட்டுப்புற  வாத்தியம் ஹரிநந்தா ஆண்கள் பிரிவு  முதலிடம் பெற்று வெற்றி பெற்றுள்ள னர். மொத்தம் 15 பிரிவுகள் போட்டியில்  கலந்து கொண்டன. இதில் 13 பிரிவு  போட்டிகளில் வெற்றி பெற்று, ஆவுடை யார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி  மாணவர்கள் கல்வி மாவட்ட அளவில்  முதலிடம் பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் அக்.31 அன்று புதுக் கோட்டை வருவாய் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர். போட்டிகளில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ- மாணவிகளையும், பயிற்சி அளித்த  ஆசிரியர்களையும் பள்ளியின் தலை மையாசிரியர் தாமரைச்செல்வன், உதவி தலைமை ஆசிரியர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பாராட்டினர்.

;