districts

கிடப்பில் உள்ள அறந்தாங்கி நகர் பாதாளச் சாக்கடை திட்டத்தை முடித்திடுக! வாலிபர் சங்க தாலுகா மாநாடு கோரிக்கை

அறந்தாங்கி, ஆக.7 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா 16-வது மாநாடு கிருஷ்ணபவன் மகா லில் நடைபெற்றது. மாநாட்டிற்கு ஒன்றியத் தலைவர் பா.சசிக்குமார் தலைமை வகித்தார்.  மாநாட்டு கொடியை மாவட்டச் செயலா ளர் துரை.நாராயணன் ஏற்றினார். மாவட்ட  தலைவர் கர்ணா துவக்க உரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் எஸ்.கோபால கிருஷ்ணன் வேலை அறிக்கை சமர்ப்பித் தார்.  15 பேர் கொண்ட தாலுகா குழு அமைக்கப் பட்டது. புதிய தலைவராக எஸ்.கோபால கிருஷ்ணன், செயலாளராக பாண்டிகௌ தம், பொருளாளராக சங்கர் தேர்வு செய்யப் பட்டனர். சிபிஎம் தாலுகா செயலாளர் தென்றல் கருப்பையா. சிபிஎம் வழக்கறிஞர்  பிரிவு மாவட்டச் செயலாளர் அலாவுதின் வாழ்த்தி பேசினர். நிறைவாக மாவட்டச் செய லாளர் துரை நாராயணன் சிறப்புரை யாற்றினார். அறந்தாங்கி அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக செயல்படுத்தி கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும். போதுமான கழிப்பறை வசதி செய்து தர  வேண்டும். அறந்தாங்கி நகரில், நீண்ட நாட்க ளாக கிடப்பில் கிடக்கும் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அறந் தாங்கி தாலுகா முழுவதும் உள்ள அரசுப்  பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங் களை உடனடியாக நிரப்ப வேண்டும்.  அறந்தாங்கி நகரில் குளம் ஆக்கிரமிப்பு களை அகற்றி குளங்களை தூர்வார வேண்டும்.  அறந்தாங்கி காவல் நிலையத்தை நகர்ப்புறம், கிராமப்புறம் என தனித்தனியாக அமைத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் பாண்டி கெளதம் நன்றி கூறினார்.

;