districts

img

புதுக்கோட்டையில் 6 துணை சுகாதார நிலையங்கள்: அமைச்சர்கள் திறந்து வைப்பு

புதுக்கோட்டை, நவ.26-  பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு  மருந்துத்துறையின் சார்பில் ரூ.1.25 கோடி செலவில் 6 புதிய துணை சுகாதார நிலையக்  கட்டடங்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணி யன், சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் திறந்து  வைத்தனர்.  பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில், ரூ.1.25 கோடி செலவில் 6 புதிய துணை சுகாதார நிலையக் கட்டடங்கள் திறப்பு விழா மாவட்ட ஆட்சி யர் கவிதா ராமு தலைமையில் வெள்ளி யன்று நடைபெற்றது. இதனை மக்கள்  நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன், சுற்றுசூழல்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்த னர்.  விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ‘‘புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டாரத்தில் தலா ரூ.20  லட்சம் மதிப்பீட்டில் வடகாடு, மாங்காடு,  கோவிலூர், மேலகாடு துணை சுகாதார நிலை யங்களையும், அறந்தாங்கி வட்டாரத்தில் மற மடக்கி துணை சுகாதார நிலையம் ரூ.20 லட்சம் மதிப்பீட்டிலும், கறம்பக்குடி வட்டாரத் தில் மருதன்கோன்விடுதி துணை சுகாதார நிலையம் ரூ.25 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.1.25 கோடி செலவில் 6 புதிய துணை சுகாதார நிலையக் கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டது.  புதுக்கோட்டை பழைய தலைமை மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு செயல்பட அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. அறந்தாங்கி  மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றார்.  இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ப.சிதம்பரம், முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சின்னத் துரை (கந்தர்வக்கோட்டை), எஸ்.மாங்குடி  (காரைக்குடி), இயக்குநர், பொது சுகாதாரம்  மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை மரு. தி.சி.செல்வவிநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;