districts

img

அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்கிடுக அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் ஆவேசம்

நாமக்கல், ஜன.21- அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவி யாளர்கள் அனைவரையும் அரசு ஊழிய ராக அறிவித்து கால முறை ஊதியம் வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவி யாளர்கள் அனைவரையும் அரசு ஊழிய ராக்கி கால முறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் ஊழியருக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வரையறுக் கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஊழியர் விரோதப் போக்கினை கடைப் பிடிக்கும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்க ளில் ஈடுபட்டனர்.  

நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளை யம் குழந்தைகள் நல வட்டார அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.கண்ணகி தலைமை வகித்தார். இதில், மாவட்டச் செயலாளர் எல்.ஜெயக் கொடி, மாவட்ட இணைச்செயலாளர் பி.கலா, மாவட்ட துணைத் தலைவர் எம். மணிமேகலை, தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க முன்னாள் செயலாளர் பால சுப்பிரமணியம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட ஆட்சியரகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அங்கன்வாடி மற்றும் உதவியாளர் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் என்.சுசீலா தலைமை வகித்தார். இதில், சங் கத்தின் மாநிலத் துணைத் தலைவர் எம்.பாக்கியம், ஒன்றியச் செயலாளர் எம்.பூங்கொடி, ஒன்றியப் பொருளாளர் ஜெ.ரஹ்மத்துன்னிசா, சத்துணவு ஊழி யர் சங்க வடக்கு ஒன்றியத் தலைவர் ஆர்.மகேந்திரபூபதி, அங்கன்வாடி ஊழி யர் சங்க மாவட்டத் தலைவர் டி.சித்ரா, சிஐடியு மாவட்டப் பொருளாளர் டி.குமார் உள்ளிட்ட பெருந்திரளான அங் கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் பங்கேற்றனர்.  

அவிநாசி தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின்  தலைவர் வளர்மதி, செயலாளர் இந்தி ராணி, விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.முத்து சாமி, அரசு ஊழியர் சங்க வட்ட கிளை செயலாளர் கருப்பன், மாவட்ட இணைச் செயலாளர் ராமன், வட்ட கிளை தலை வர் சுமதி, அங்கன்வாடி ஊழியர் சங்க பொருளாளர் மல்லிகா உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

;