districts

img

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தானிய கிட்டங்கி, பண்ணைக்குட்டை குமரி மாவட்ட  ‘திசா’ கூட்டத்தில் ஆட்சியர் தகவல்

நாகர்கோவில், செப்.25- கன்னியாகுமரி மாவட்ட ஆட்சி யர் மா.அரவிந்த், தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் வ.விஜய்  வசந்த் முன்னிலையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட  ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் சனியன்று (செப்.24) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கூறிய தாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில், ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு தித்திட்டத்தின் (MGNREGS) கீழ்,  கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில், தனிநபர்  விவசாய நிலங்களில் மண்வரப்பு  அமைத்தல், கழிவுநீர் உறிஞ்சுக்குழி, தனிநபர் கழிப்பறை, சாலை அமைத் தல், ஊராட்சி அளவிலான கூட்ட மைப்பு கட்டிடம், உணவு தானிய கிட்டங்கி, பண்ணைக்குட்டை அமைத்  தல், தடுப்பணை மற்றும் கால்வாய்  புனரமைத்தல், ஊரக பகுதிகளி லுள்ள ஏழை, எளிய பொதுமக்க ளுக்கு பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் (PMSY (G)), ஊரக பகுதி மக்  கள் சுகாதாரத்தில் முன்னேற்றம் அடையவும், திறந்தவெளியில் மலம் கழித்தலை தவிர்த்திடவும்  நட வடிக்கை எடுத்திட வேண்டும். திட, திரவ கழிவு மேலாண்மை ஆகியவற்றை செயல்படுத்தும் தூய்மை பாரத இயக்கம், பிரதம  மந்திரியின் கிராமப்புற சாலை மேம்  பாட்டுத்திட்டம் (PMGSY), ஒருங்கி ணைந்த உள்ளூர் பொருளாதார வளர்ச்சி, மேம்படுத்தப்பட்ட அடிப்  படை வசதிகள், கிராமப்புற பகுதி களில் உருவாக்கும் விதமாக தேசிய ரூர்பன் இயக்கம் (National Rurban Mission), பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம் (MPLADS), ஊரக பகுதிகளில் வாழும் மக்க ளுக்கு வீடுகள் தோறும் வீட்டு குடி நீர் இணைப்பு வழங்குவதற்கான ‘ஜல் ஜீவன் மிஷன்” (Jal Jeevan  Mission), விவசாய பெருங்குடி மக்  களுக்கான நுண்ணீர் பாசனத்திட் டம் (PMKSY), பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம் (PMFBY), மண் வள அட்டை இயக்கத்திட்டம் (SHC),   புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி யின் பயிர் காப்பீடுத் திட்டம்; (RPMFBY), தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டம் NADP (RKVY), மாவட்ட தொழில் மையம் வாயி லாக பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம்  (PMEGP) ஆகிய வளர்ச்சி திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், தமிழ்நாடு மின்உற் பத்தி மற்றும் பகிர்மான கழகம் வாயிலாக அதிக மக்கள் தொகை கொண்ட கிராம ஊராட்சிகளில் மின்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த  தீன்தயாள் உபாத்தி யாய கிராம மின் வளர்ச்சித்திட்டம் (DDUGJY)> பேரூராட்சி பகுதிகளில் மின்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டுத்திட்டம் (IPDS) உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்ற  படாமல் இருந்தால் விரைந்து நிறை வேற்றிட அலுவலர்களுக்கு அறி வுறுத்தப்பட்டது. ஒருங்கிணைந்த  குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் வாயிலாக கடுமையான மற்றும் மித மான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை அங்கன்வாடி மையத்தில் மாதந்தோறும் எடை  மற்றும் உயரம் கணக்கீட்டின் மூலம் கண்டறிந்து, அவர்களது வீடுக ளுக்கு சென்று பார்வையிட்டு, ஊட்  டச்சத்து உணவுகள் குறித்த ஆலோ சனைகள் வழங்கவும், கடுமை யான மற்றும் தீவிர  எடை குறைந்த குழந்தைகளை கண்டறியப்பட் டால் அவர்களை மேல் மருத்துவ பரிசீலனைக்காக மருத்துவ குழு விற்கு பரிந்துரை செய்யவும்  அறி வுறுத்தப்பட்டது. மக்கள் நல்வாழ்வு துறை வாயிலாக, செயல்படுத்தப் பட்டு வரும் அனைத்து மத்திய அர சின் திட்டங்களையும் தொடர்ந்து செல்படுத்தி, ஏழை, எளிய மக்கள்  பயன்பெறும் விதமாக திட்டங்க ளின் பயன்களை எடுத்துக்கூறவேண்டும். மேலும், நிதி ஒதுக்கீடு பெறப் பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகா தார நிலையம் மற்றும் துணை சுகா தார நிலையம் கட்டுவதற்கான பணியினை விரைந்து செயல் படுத்த அறிவுறுத்தப்பட்டது.

 அம்  ரூத் திட்டத்தின்கீழ் மாநகராட்சி, நக ராட்சிகள் வாயிலாக செயல்படுத்  தப்பட்டு வரும் குடிநீர் அபிவிருத்தித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்  பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) வாயிலாக குளங்  கள், ஆறுகள், நீரோடைகள், அணைகள் ஆகியவற்றிலுள்ள மத குகள் உள்ளிட்டவைகளில் ஏதே னும் குறைபாடுகள் இருந்தால், அதனை உடனடியாக சரிசெய்தும்,  பாலப்பணிகளை பொதுமக்க ளுக்கு இடையூறுமின்றி விரைந்து முடித்தும்  பொதுமக்களின் பயன் பாட்டிற்கு கொண்டுவரவும்,  பள்ளி  கல்வித்துறையில் செயல்படுத்தப் பட்டு வரும் கட்டட பணிகள் உள் ளிட்ட அடிப்படை வசதிகளை விரைந்து முடித்திட வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், இத்திட்டப்பணிகளை செயல்படுத்த ஏதேனும் இடையூறு கள் இருந்தால் அவற்றை  உடனடியாக மாவட்ட நிர்வா கத்திற்கு தெரியப்படுத்தியும், பணி களை விரைந்து முடிக்க வேண்டு மெனவும் மாவட்ட  ஆட்சியர் தெரி வித்தார். இக்கூட்டத்தில், நாகர்  கோவில் மாநகர மேயர் ரெ. மகேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் ந.தளவாய் சுந்தரம் (கன்னியா குமரி), ஜெ.ஜி.பிரின்ஸ் (குளச்சல்),  செ.ராஜேஷ்குமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் முனைவர்.எஸ்.மெர்லியன்ட் தாஸ், மாவட்ட  வருவாய் அலுவலர் அ.சிவப் பிரியா, பத்மநாபபுரம் சார் ஆட்சி யர் பு.அலர்மேல் மங்கை, நாகர்  கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், மாவட்ட வன அலுவலர் மு.இளையராஜா, ஊரக  வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ச.சா.தனபதி, நாகர்கோவில் வரு வாய் கோட்டாட்சியர் திரு.க.சேது ராமலிங்கம், ஊராட்சி ஒன்றியத்  தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதி கள் மற்றும் அனைத்துத்துறை அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

;