districts

சுற்றுலா தொழில்துறையினர் உரிமம் பதிவு செய்ய அறிவுறுத்தல்

நாகர்கோவில், டிச.11- கன்னியாகுமரி மாவட் டத்தில் சுற்றுலா தொழில் நடத்துபவர்கள் சுற்றுலா இணையதளத்தில் பதிவு  செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், அறி வித்துள்ளார். இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு அரசின் சுற்று லாத் துறை சார்பாக மாநி லத்தின் பல்வேறு சுற்றுலா ஆபரேட்டர்களான Bed &  Breakfast மற்றும் Home stay நிறுவனங்களுக்கு வழி காட்டுதல்களை உருவாக்கு தல், Adventure Tourism Operators> Camping Operators, Caravan &  Park Operators தங்கள்  நிறுவனங்களை பதிவு  செய்வதற்கான அரசாணை கள் வெளியிடப்பட்டுள்ளது.  அதன்படி சுற்றுலா சார்ந்த ஆபரேட்டர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பதிவு போர்டலின் நகலினை www.tntourismtors.com என்ற இணையதளம் மூலம் பெறலாம்.        சுற்றுலா தொழில் முனை வோர்கள் முறையான உரி மம் இல்லாமல் தங்கள் தொழில்  வணிகத்தினை நடத்தி வரு கின்றனர். இந்த ஆபரேட்டர் கள் அரசாணையில் உள்ள வழிகாட்டுதல்களைப் பற்றி அறிந்திருப்பதுடன் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் பதிவு  செய்யப்பட வேண்டும். தமிழ்நாடு அரசின் சுற்று லாத்துறையில் சுற்றுலா ஆப ரேட்டர்கள் பதிவு செய்வற் கான இணையதளம் மற்றும் தொடர்பு அலுவலகம் விவ ரங்கள் அறிவிக்கப்பட்டுள் ளது. மேலும் இதுதொடர்பான விவரங்களை அறிந்து  கொள்ள சுற்றுலா அலுவல கம், கன்னியாகுமரி தொடர்பு எண்: 04652 - 246276, கைபேசி எண் - 9176995866 மற்றும் மின்னஞ்சல் முகவரி  tokki702@gmail.com  தொடர்பு கொள்ள வேண்டு மென அறிவிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.