districts

ஆயூர்வேத பஞ்ச கர்ம சிகிச்சை முறையில் கர்ப்பபை நீர்க்கட்டி பிரச்சனைக்கு தீர்வு அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி முதல்வர் தகவல்

நாகர்கோவில், மார்ச் 7- பஞ்ச கர்ம சிகிச்சை முறையில் கர்ப்பபை நீர்க்கட்டி பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்து வக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் கிளாரன்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது: நீர்க்கட்டிகள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, இன்சுலின் எதிர்ப்பு தைராய்டு கோளாறுகளுடன் கூடிய கூட்டு நிலையாகும். இதன் வெளிப் பாடாக ஒழுங்கற்ற மாதவிடாய், முடிகொட்டுதல், உடல் பருமனா குதல், முகப்பரு, குழந்தையின்மை முதலியவை ஏற்படுகிறது. நமது ஒழுங்கற்ற வாழ்வியல் முறைகள், தவறான உணவு பழக்கங் கள் சோம்பேறித்தனமான வாழ்வியல் நெறிமுறைகள் உதாரணமாக வீடு களுக்கு உள்ளாகவே இருத்தல், வீடியோ கேம்கள் விளையாடுதல் மேலும் கணினி, மொபைல் போன்ற வற்றுடன் அதிக நேரம் செலவிடு வதல் போதுமான தூக்கமின்மை, குறைந்த உடல் உழைப்பு ஆகியவை சந்தேகமின்றி சினைப்பை நீர்க் கட்டிகள் ஏற்படுதலுக்கான முக்கிய காரணங்கள் ஆகிறது. இதனுடன் மரபணு (மரபுவழி) காரணங்களும் பெரும் பங்கு வகிக்கிறது. கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் எப்போதும் உடல் பருமனுடன் மட்டுமே தொடர் புடையது அல்ல. மெலிதான குறைந்த உடல் எடை கொண்டோருக்கும் கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் ஏற்படலாம். அவர்க ளில் மனஅழுத்தம், கவலை, சோம் பேறித்தனமான வாழ்வியல் முறை கள் போன்ற காரணிகள் இதற்கான காரணமாக அமைகிறது.

மெலிதான குறைந்த உடல் எடை கொண்ட பெண்கள் மாறுபாடு கொண்ட கொழுப்பு மற்றும் தசை விகிதம் அதாவது குறைந்த தசை மற்றும் அதிக கொழுப்பு திசுக்கள் அல்லது உடலின் மத்திய பகுதியில் அதீத பருமன் மற்றும் அதிக இடுப்பு சுற்றளவுடன் காணப்படுவர்.  இவர்களுக்கு இதனைத் தொடர்ந்து இன்சுலின் எதிர்ப்பு மற்றும் நீரழிவு நோய் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. சினைப்பை நீர்க்கட்டிகள் நோயானது மற்ற நோய்களைக் காட்டிலும் சற்று வித்தியசமானது. யு.எஸ்.ஜி. ஸ்கேன் மற்றும் தைராய்டு சுரப்பியின் செயல்பாடு முதலிய பரி சோதனைகள் மேற்கொண்டாலும் உறுதிப்படுத்துவதற்கு அறிகுறிகள் மற்றும் மருத்துவ வழிமுறைகளும் அவசியமாகும். கர்ப்பப்பை நீர்க்கட்டிகளின் தாக்கம் லேசான, மிதமான அல்லது தீவிரமான நிலையிலும் இருக்க லாம். அதற்கேற்ப சிகிச்சை முறைக ளும் மாறுபடுகின்றன. அனைத்து  கர்ப்பப்பை நீர்க்கட்டி நோயாளிகளுக் கும் ஒரே நிலைத்த சிகிச்சை வழி முறைகள் பின்பற்றப்படுவதில்லை. இதிலும் குறிப்பாக கர்ப்பப்பை நீர்க்கட்டியால் அவதிப்படும் பெரும் பாலானோர் அதிக உடல் பரும னுடன் இருப்பர். அதேபோன்று பலரும் விடுபட்ட மற்றும் முறையற்ற மாதவிடாயி னாலேயே உடல் எடை கூடுவதாக எண்ணுகின்றனர். ஆனால் உண்மை யாதெனில் உடல் எடை கூடுவதா லேயே விடுபட்ட மாதவிடாய் மற்றும் முறையற்ற மாதவிடாய் ஏற்படுகிறது.

அதிக எடை, உடல் பருமன் கொண்டோர் ஆரோக்கியமான உண வுடன் கூடிய நடைப்பயிற்சி, உடற் பயிற்சிகள் மற்றும் யோகா பயிற்சிகள் மேற்கொள்ளுதல் மூலம் உடல் எடையை குறைக்கலாம். உணவு கட்டுப்பாடு, நடைப் பயிற்சி, யோகா மற்றும் ஏரோபிக் உடற்பயிற்சிகள் போன்றவை நல்ல  பலன் அளிக்கக்கூடியவை. சுருக்க மாக கூறவேண்டு மென்றால் சுறு சுறுப்பான உடலுழைப்புடன் கூடிய  வாழ்வியல் முறையே இந்நோய்க் கான தகுந்த தீர்வாகும். மேலும் இதனுடன் ஆயுர்வேத பஞ்சகர்ம உடல் நச்சு நீக்க செயல்முறைகளும் சிறப்பான பலனை வழங்குகின்றன. உடற்பயிற்சி, சத்தான உணவு மற்றும் வாழ்வியல் முறைகளுடன் ஆயுர்வேத பஞ்சகர்ம சிகிச்சைகள் எடுத்துக் கொள்ளுதல் மூலம் சிறந்த தீர்வை வழங்க முடியும். மேலும் இது குறித்த தகவல்கள் மற்றும் சிகிச்சை பெற அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனை யின் பெண்களுக்கான வெளி நோயாளிகள் பிரிவு 3-ஐ அணு கலாம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

;