districts

img

மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை நாகைமாலி எம்எல்ஏ வழங்கினார்

நாகப்பட்டினம்,  மே 18 -  நாகப்பட்டினம் மாவட்டத் தில் மீனவர் குறைதீர் நாள்  கூட்டம் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் நடைபெற் றது. இதில் கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாகப்பட்டினம் மாவட்டத் தில் மீனவர்களின் அடிப் படைத் தேவைகளையும் வாழ்வாதாரத்தையும் பூர்த்தி  செய்திடும் வகையில் மீன வர்களுக்கான குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. தற்சமயம் மீன்பிடித் தடை  காலம் உள்ளதால் மீனவர்கள்  கடலுக்குள் சென்று மீன்  பிடிக்காத நிலையில் உள்ள னர். எனவே அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்திடும் வகையில் அவர்க ளின் தொழிலுக்கு தேவை யான பொருட்கள் வழங்கப்பட் டன. நாகை மாவட்ட ஆட்சியர்  மருத்துவர் அருண் தம்புராஜ்  தலைமையில் நடைபெற்ற, இக்கூட்டத்தில் நாகப்பட்டி னம், வேதாரண்யம், கீழ்வே ளூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற் பட்ட மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.  இறந்த மீனவர்களுக்கு விபத்துக் குழு காப்புறுதித் திட்டத்தின் கீழ் உதவிகள், மரணமடைந்த மீனவர் வாரி சுகளுக்கு நிதி உதவிகள், தொழிலுக்குச் செல்லும் மீன வர்களுக்கு இயந்திரங்கள் உள்ளிட்ட உதவிகள் என இக்கூட்டத்தில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.  இதில் தமிழக மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் என்.கௌதமன், மீன்வளத் துறை இணை இயக்குனர் ஜெயராஜ் மற்றும் நாகப்பட் டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

;