districts

காரைக்கால் துறைமுகத்திற்கு 44 ஆயிரம் மெ.டன் யூரியா வருகை

நாகப்பட்டினம், டிச.4 - காரைக்காலில் செயல்பட்டு வரும் தனி யார் துறைமுகத்திற்கு 44 ஆயிரம் மெட்ரிக்  டன் யூரியா வந்தடைந்தது.  வடகிழக்கு பருவமழை துவங்கி காவிரி  டெல்டா பகுதிகளில் சம்பா போகத்திற் கான விவசாயம் நடைபெற்று வருகிறது.  காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூர்,  திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட பகுதி களில் பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலப் பகுதியில் நெல் விவசாயம் நடைபெற்று வரு கிறது. இந்த விவசாயத்திற்கு யூரியா  அவசியமான உரமாக பயன்படுத்தப்படு கிறது. தனியார் உரக் கிடங்குகளிலும், அர சின் கூட்டுறவு நிலையங்களிலும், விவசாயி களுக்கு யூரியா மற்றும் டிஏபி உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.  மலேசியாவில் இருந்து வந்த 44 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உரம் கப்பல் மூலம் காரைக்கால் துறைமுகம் வந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு டிசம்பர் மாதத்திற்கு மட்டும்  27,140 மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. தமிழ்நாட்டில் உள்ள வேளாண் மாவட்டங்களுக்கு தேவைக்கேற்ப ரயில் மூலமாகவும் சாலை மார்க்கமாகவும் யூரியா  உரம் அனுப்பப்பட உள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட யூரியா உரம் 45  கிலோ மூட்டையாக பேக்கிங் செய்யப்பட்டு,  தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்  சங்கம், தனியார் உர விற்பனை நிலையங் களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. யூரி யாவின் தரம் குறித்து நாகை மாவட்ட ஆட்சி யர் மரு.அருண்தம்புராஜ் நேரில் ஆய்வு செய்தார்.

;