districts

img

திடீரென உள்வாங்கிய கிணறு: பொதுமக்கள் அச்சம்

வேதாரண்யம், ஏப்.17 - நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண் யத்தை அடுத்த செம் போடை வடகாடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது தோட்டத்தில் இருந்த  கிணறு சனிக்கிழமை  திடீரென உள்வாங்கியதால் அதிர்ச்சியடைந் தார். இதுகுறித்து விவசாயி கந்தசாமி கூறுகை யில், மாமரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சவும்,  ஊடுபயிராக கடலை சாகுபடிக்கும் தண்ணீர் தேவைப்பட்டது. இதற்காக 4 ஆண்டு களுக்கு முன்பு எனது தோட்டத்தில் கிணறு வெட்டினேன். 20 அடி சுற்றளவிலும், 22 அடி ஆழத்திலும் இந்த கிணற்றை வெட்டினேன். இதில் தண்ணீர் நன்றாக ஊறியதால் பயிர்களுக்கு பாய்ச்சி விவசாயம் செய்து வந்தேன். இந்நிலையில் சனிக்கிழமை காலை  பார்த்தபோது கிணறு உள்வாங்கி பூமிக்குள் சென்றிருந்தது. இதற்கு என்ன காரணம் என தெரியவில்லை. மண்ணும் சரிந்துவிட்டது. வெள்ளியன்று இப்பகுதியில் மின்னல் தாக்கி யதில் சில வீடுகளில் மின்சாதன பொருட்கள்  சேதம் அடைந்தன. மின்னல் தாக்கியதால்  கிணறு உள்வாங்கியதா என தெரியவில்லை. இதுதொடர்பாக வருவாய்த்துறை அதிகாரி களுக்கு தெரிவித்துள்ளேன் என்றார்.