districts

img

விவசாயிகள் சங்க மாநில மாநாட்டில் பாரம்பரிய விதைகள் கண்காட்சி

நாகப்பட்டினம், செப்.20 - நாகப்பட்டினத்தில் நடைபெற்ற விவசாயி கள் சங்க மாநில மாநாட்டில் விதை கண் காட்சி, வரலாற்று கண்காட்சி, புத்தக கண்காட் சிகள் பயனுள்ள வகையில் அமைந்திருந் தன.  மரபுசார்ந்த விதைகளை பாதுகாத்து அதை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் விவசாயம் சார்ந்த பெருங்குடி மக்களே தற்சார்புடன் செயல்பட்டு விதைப் பது முதல் அதை வியாபாரம் ஆக்குவது வரை  விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற  நோக்கில் விதை கண்காட்சி நடைபெற்றது. வெள்ளை அரிசி, சிகப்பரிசி, கருப்பரிசி என  நிறத்தின் வகைப்பாட்டிலும், வடிவத்தின் அடிப்படையிலும் நெல் மணிகள் வகைப் படுத்தப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அதுபோலவே அறுவடை செய்யும் காலத்தின் அடிப்படையிலும், பருவ காலத் திற்கு ஏற்ற விதை அடிப்படையிலும் வகைப் படுத்தப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந் தன. 400-க்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. மரபுசார்ந்த விதைகளான இலுப்பம் பூ சம்பா, பெரும் பாலை, குடவாழை, குத்தாளை, கருப்பு கவுனி,  பூம்பாலை, காட்டுயானம், கருத்தகார், பெருங் கார், பூங்கார், நெல்லிக்கார் என மரபின் மீட்சி யாய் நெல் மணிகள் அடுக்கப்பட்டிருந்தன.  முப்போகம், இருபோகம், ஒரு போகம் என விளையக்கூடிய நெல் ரகங்களும். அவற்றை பயிரிட்டு உண்பதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளும் விளக்கி கூறப் பட்டது. நெல் ரகங்களை தனியார் நிறுவ னங்கள் கபளீகரம் செய்து வரும் சூழ்நிலை யில், வேட்டைச் சமூகம், வேளாண் சமூகத் தில் துவங்கி இன்று வரை உலகிற்கு உண வளிக்கும் வேளாண் பாரம்பரியத்திற்கு நமக்கான உணவை நாமே தயார் செய்யும் நம் மண்ணின் மரபு சார்ந்த விதைகளை மீட்டுரு வாக்கம் செய்து, அதை நாகை விவசாயிகள் சங்க மாநில மாநாட்டில் காட்சிப்படுத்தியது பெரும் பாராட்டைப் பெற்றது.

புத்தகக் கண்காட்சி
மாநில மாநாட்டு அரங்க வளாகத்தில் பாரதி புத்தகாலயத்தின் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. பாரதி புத்தகாலயத்தின் புத்த கங்களை மாநாட்டிற்கு வந்திருந்த அனை வரும் வாங்கி சென்றனர். பல புத்தகங்கள் தள்ளுபடி விலையில் கிடைத்தன.

வரலாற்று கண்காட்சி
களப்பால் குப்பு, மணலூர் மணியம்மை, தஞ்சை தியாகி வெங்கடாசலம், சிக்கல் பக்கிரிசாமி, வாட்டாக்குடி இரணியன், சிவ ராமன் என வரலாற்று கண்காட்சி அரங்கம் முழுவதும் தியாகிகளின் தியாகத்தால் நிரப் பப்பட்டிருந்தது. இதற்கு முத்தாய்ப்பாகவும் மணிமுடியாகவும் இம்மாநாடு நடைபெற்ற மண், வீரத்தின் விளைநிலம் வெண்மணி மண் என்பதால் தியாகம் செறிந்த வீர  வரலாற்று பதிவுகள் காட்சிக்கு வைக்கப்பட்டி ருந்தன. அரங்கத்தின் முகப்பே வெண்மணியின் நினைவுகளை பறைசாற்றும் விதத்தில் அமைந்திருந்தது. கணக்கிலடங்கா தோழர்க ளின் தியாகத்தால் செங்கொடி இயக்கம் இம் மண்ணுக்கும் மக்களுக்கும் ஆற்றிய சேவை கள் புகைப்படமாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந் தன. தென்பரையில் துவங்கிய விவசாய சங்கம், சந்தித்த போராட்டங்கள், செய்த தியா கங்கள், பெற்ற உரிமைகள், சாதித்துக் காட்டிய  வரலாற்று உண்மைகள், என வரலாற்று ஆவ ணமாக காட்சிப் படுத்தப்பட்டிருந்தது.  வரலாற்றின் வழிநெடுகிலும் உடலு ழைப்பு செலுத்தி பிழைக்கும் மக்களுக்கு செங்கொடி இயக்கம் ஆற்றிய பங்கும், வீரம் செறிந்த வரலாற்று உண்மைகளை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லும் நோக்கி லும் இம்மாநாட்டின் வரலாற்றுக் கண்காட்சி அமைந்தது.

வெகுஜன அரங்கங்களில் வாழ்த்து
மாநாட்டிற்கு வந்த பிரதிநிதிகளையும் தலைவர்களையும் வரவேற்று, மாநாடு சகல  விதத்திலும் வெற்றி பெற இந்திய மாணவர் சங்கம், வாலிபர் சங்கம், மாதர் சங்கம், சிஐடியு,  தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விவசாயத் தொழிலாளர் சங்கம் என அனைத்து அரங்கங் களின் சார்பிலும் வாழ்த்து பேனர்கள் வைக்கப் பட்டு இருந்தன. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில்  மாநாட்டு வளாகத்தில் எலுமிச்சை இஞ்சி கலந்த சுவையான மூலிகை தேநீர் மாநாடு  துவங்கிய முதல் நிறைவுபெறும் வரை தொடர்ச்சியாக வழங்கப்பட்டு கொண்டிருந்தது.

;