districts

img

காய்ச்சல் கண்டறியும் முகாமை நாகைமாலி எம்எல்ஏ தொடக்கி வைத்தார்

நாகப்பட்டினம், செப்.21- நாகப்பட்டினம் மாவட்டத்தில் 97 இடங் களில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடை பெற்றது. கீழ்வேளூர் சட்டமன்றத்திற்குட் பட்ட புதுச்சேரி ஊராட்சியில் கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் வி.பி. நாகைமாலி முகாமை  தொடங்கி வைத்தார்.  பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத் தில் அதிகரித்து வரும் பல்வேறு வகையான  வைரஸ் காய்ச்சலை கண்டறிந்து தடுப்பதற் காக தமிழகம் முழுவதும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாகப்பட்டி னம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டத்திற்கு உட்பட்ட புதுச்சேரி ஊராட்சியில் நடைபெற்ற  முகாமினை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பி னர் வி.பி.நாகைமாலி தொடங்கி வைத்து ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் புதுச்சேரி ஊராட்சி மன்ற  தலைவர் கோமதி ஜீவாராமன், வடுகச்சேரி வட்டார மருத்துவர், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

;