districts

img

திடீரென பெய்த கடும் மழையால் குறுவை சாகுபடி பாதிப்பு  நிவாரணம் வழங்க சிபிஎம் கோரிக்கை

நாகப்பட்டினம், செப்.29- மழையால் பாதிக்கப்பட்ட குறுவை சாகுபடிக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என நாகப்பட்டினம்  மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு கேட்டுக்கொண்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் செப்டம்பர் 26, 27  தேதி களில் வெப்பச் சலத்தின் காரணமாக திடீரென  கனமழை  பெய்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட குறுவை சாகுபடி சேதமடைந்தது.  மேலும் மாவட்டம் முழுவதிலும் சுமார் 15,000 ஏக்கர் நிலப்பரப்பில் செய்யப்  பட்ட குறுவை சாகுபடி முற்றிலுமாக அழிந்து விட்டது.  எனவே, தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவதோடு, அறுவடை  செய்யப்பட்ட நெல்மணிகளை ஈரப்பதம் மிகுதியாக இருந் தாலும் அவற்றை நேரடி நெல் கொள்முதல் நிலையங்க ளில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று  கோரிக்கை விடுத்துள்ளது.  

;