districts

img

கோவூர் ஊராட்சியில் 15 குடும்பங்கள் சிபிஎம் கட்சியில் இணைந்த விழா

நாகப்பட்டினம், செப்.8 - கீழ்வேளூர் வட்டம் கோவூர்  ஊராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியில் 15-க்கும் மேற்பட்ட குடும்பங் கள் இணைந்த விழா நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வே ளூர் வடக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த கோவூர் ஊராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செய லாளர் ஆர்.குணசேகரன் தலைமை யில் 15-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். இந்த விழாவில் கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினரும், சிபிஎம் மாநில  குழு உறுப்பினருமான வி.பி.நாகை மாலி செங்கொடியை ஏற்றி வைத்தார்.  பின்னர் கட்சியில் இணைந்தவர் களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்தி  பேசினார். நாகை மாவட்டச் செயலாளர்  வி.மாரிமுத்து, கீழ்வேளூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் என்.எம்.அபு பக்கர், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ். பாண்டியன், ஒன்றியக் குழு உறுப்பி னர் கே.வி.மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு  சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி முயற்சியால், கோகூரிலிருந்து நாகப்பட்டினத்திற்கும், திருவாரூ ருக்கும் சென்று வர நீண்ட கால கோரிக்கையாக இருந்த பேருந்து பயண வசதியை அம்மக்களுக்கு ஏற் படுத்திக் கொடுத்தார் என்பது குறிப் பிடத்தக்கது.

;