districts

img

தேனி, திண்டுக்கல்லில் சிவப்பு புத்தக தினம்

தேனி, பிப்.21- தொழிலாளி வர்க்கத்தின் மாமேதைகள் காரல் மார்க்ஸ், பிரடெரிக் ஏங் கெல்ஸ் ஆகியோர் எழுதிய  கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிட்டதன் 175 ஆவது ஆண்டு உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அத னையொட்டி உலகம் முழு வதும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சிவப்பு புத்தகம் வாசிப்பு இயக்கம் துவக்கி வாசிக்கத் தொடங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  சிவப்பு புத்தக தினம் கொண்  டாடப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக தேனி மாவட்  டத்தில் பல்வேறு இடங்களில் மார்க்ஸ் -ஏங்கெல்ஸ் எழு திய மதத்தை பற்றி என்னும் நூல் வாசிக்கப்பட்டது. தேனி தாலுகா மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலு வலகத்தில் தேனி தாலுகா உறுப்பினர் ம. காமுத்துரை தலைமையில் நடைபெற்ற வாசிப்பு நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி. வெங்கடேசன், தாலுகா செய லாளர் இ.தர்மர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண் டனர். ஆண்டிபட்டி, போடி, பெரியகுளம், சின்னமனூர், பாளையம், கோம்பை, கம்பம் உள்ளிட்ட இடங்க ளில் நூல் வாசிக்கப்பட்டது. பெரியகுளத்தில் பெண்கள் கட்சி கிளையிலும் இந் நிகழ்வு நடைபெற்றது.
திண்டுக்கல் 
திண்டுக்கல்லில் சிவப்பு புத்தகம் வாசிப்பு இயக்கம் நடைபெற்றது. சிபிஎம்  நகரச்செயலாளர் ஏ.அரபு முகமது தலைமையில் புத்தகம் வாசிக்கப்பட்டது. மாணவர் சங்கம் சார்பாக வும் வாசிப்பு இயக்கம் நடை பெற்றது. மாவட்டச்செயலா ளர் தீபக்ராஜ், மாவட்டத் தலைவர் முகேஷ் உள்  ளிட்டோர் கலந்து கொண்ட னர்.            (ந.நி.)

;