districts

கொரோனாவிலும் பல லட்சம் ரூபாய் சுருட்டிய சுகாதாரத்துறை அதிகாரிகள்

தேனி, ஜன.23-  கொரோனா 2 ஆம் அலையின்  போது போலி பில் தயாரித்து பல  லட்சம் ரூபாய் முறைகேடு செய்த  சுகாதாரத்துறை இணை இயக்கு நர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சி யர் க.வீ.முரளீதரன் பரிந்துரைத் துள்ளார். கொரோனா இரண்டாம் அலையின் போது மருந்து மாத்தி ரைகள், கையுறை, முகக் கவசம்,  சானிடைசர், கொரோனா நல மையங்களுக்கு கட்டில், மெத்தை போன்ற உபகரணம் வாங்கு வதற்கு தமிழக அரசு ரூ.1 கோடி நிதி ஒதுக்கியது. பாதிக்கப்பட்ட வர்களுக்கு மருந்து, உபகர ணங்கள் உடனடியாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் கொடுக்கப்பட்டது.  மொத்த கொள்முதல் செய் தால் கால தாமதம், தணிக்கை இல்லை. எனவே உடனடியாக தேவையான பொருட்களை வாங்கி பயன்படுத்த அரசு அறி வுறுத்தியது. இதை சாதகமாக பயன்படுத்தி சுமார் ரூ.60 லட்சம் வரை கல்லா கட்டியுள்ளனர். இந்த முறைகேட்டில் சுகாதாரத் துறை இணை இயக்குநராக இருந்த ரமேஷ், கொள்முதல் பொறுப்பில் இருந்த மருத்து வர் மனோஜ் ஆகியோர் ஈடு பட்டுள்ளனர். கொரோனா காலத்தில் தனி யார் நிறுவனங்கள், தொண்டு நிறு வனங்கள், வர்த்தக நிறுவனங் கள், ஆலை உரிமையாளர்கள் இலவசமாக கொடுத்த மருத்துவ உபகரணங்களை, விலைக்கு வாங்கியதாக போலி பில் தயா ரித்து மோசடி செய்துள்ளனர்.

 அந்த நேரத்தில் தொழிலாளர் கள் தடுப்பூசி போட்டால் மட் டுமே இயங்க முடியும் என கூறி தொழிற்சாலைகளில் முகாம் நடத்த வேண்டும் என கூறி மிரட்டி முகக் கவசம், கையுறை, கட்டில், மேதைகள் என இலவசமாக வாங்கியுள்ளனர்.  இதுகுறித்து எழுந்த புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரன் விசாரணை கமிஷன் அமைத்துள்ளார். விசாரணை முடிந்த நிலையில், இணை இயக்குநர் ரமேஷ், இணை இயக்குநர் அலுவலகத்தில்  உதவி திட்ட அலுவலராக இருந்த மனோஜ் ஆகியோர் முறை கேட்டில் ஈடுபட்டதாக  அறிக்கை யில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சி யர் க.வீ.முரளீதரன் கூறும் போது, விசாரணையில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டுள் ளது. இருவரின் மீது நடவடிக்கை எடுக்க பொது சுகாதாரத் துறை இயக்குநருக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது என்றார்.   இணை இயக்குநர் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டத்திலும், மருத்துவர் மனோஜ் திண்டுக்கல் மாவட்டம் பழனியிலும் நகர் நல  அலுவலராக பணிபுரிந்து வரு கின்றனர்.

;