districts

மதுரை சாலையில் குடியிருப்பவர்களுக்கு தாமதமின்றி மாற்று இடம் வழங்கிடுக! தேனி ஆட்சியரிடம் சிபிஎம் வலியுறுத்தல்

தேனி ,பிப்.16- மேம்பால பணிக்காக கடைகள் அகற் றப்பட்ட நிலையில் வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது ,மாற் றும் இடம் தரும் வரையில் வீடுகளை அகற்றக்கூடாது என தேனி ஆட்சியர் ஷஜீவனாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் சந்தித்து வலியுறுத்தி னர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பால பாரதி ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் டி.வெங்கடேசன் , சி.முருகன் , சு.வெண்மணி ,தேனி தாலுகா செயலாளர் மாவட்டக்குழு உறுப்பினர் கே.தயாளன் ஆகியோர் தேனி ஆட்சியர் ஷஜீவனாவை நேரில் சந்தித்து மனு அளித்தனர் . அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: தேனி அல்லிநகரம் நகராட்சி 32 வது வார்டு ,மதுரை சாலையில் கடந்த 80 ஆண்டு களுக்கு மேலாக 104 குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர் .கடந்த 2002 ஆண்டுமுதல் மாற்று இடம் கொடுத்த பின்பு தான் காலி செய்வதாக வருவாய்த் துறையினர் தெரிவித்தனர் .தற்போது மேம்பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருதல் தேசிய நெடுஞ்சாலை துறையினர் நோட்டீஸ் விநியோகம் செய்து விட்டு, எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் கடந்த 14 ஆம் தேதி காலை வீடுகளின் மின் இணைப்புகளை துண்டித்து விட்டு, வீடுகளின் முன்பு இருந்த  சிறு தொழில் செய்த கடைகளை இடித்து விட்ட னர். வீடு,கடைகளில் இருந்த பொருட்களையும் ,தகரங்களை கூட எடுக்க விடாமல் இடித்து விட்டதால் மக்கள் நிர்க்கதியாக உள்ளனர் . எனவே மாற்று இடம் கொடுக்கும் வரை வீடுகளில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை வழங்க வேண்டும் .தாமதமின்றி மாற்று இடம் வழங்க வேண்டும் என அந்த மனுவில் தெரி வித்துள்ளனர் . 

அது போல  ஆண்டிபட்டி ஒன்றியத்தில்  ஏத்தக்கோவில், தெப்பம்பட்டி, பிச்சம்பட்டி, மறவபட்டி, கதிர்நரசிங்கபுரம்  உள்ளிட்ட 35 ஊராட்சிகளில் 162  கிராமங்களில் உள்ள 18 கண்மாய்களும் 150 சிறுகுளங்கள் ,கண்மாய்களுக்கு முல்லை பெரியாற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டத்திற்கு நிதி ஒதுக்க மாநில அரசுக்கு பரிந்துரை செய்யவேண்டும் என வலியுறுத்தினர் . பஞ்சமி நிலங்களை மீட்டிடுக தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாவட்ட செயலாளர் இ தர்மர், தேனி ஆட்சியரிடம் அளித்த  மனுவில் , தேனி வட்டம் வீரபாண்டி கிராமம் சர்வே எண் 2021 ,சர்வே எண் 953/1,914/4,பெரியகுளம் வட்டம் ,கெங்குவார்பட்டி பிட் 1 கிராமம், சர்வே எண்  432,433 ஆகிய பஞ்சமி நிலங்கள் போலி ஆவணம் தயாரித்து பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது.பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கடந்த நவம்பர் மாதம் 22 ஆம் தேதி தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது .அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை .எனவே பஞ்சமி நிலங்க ளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;