districts

நாளை தென்காசிக்கு முதல்வர் வருகை காவல்துறை தலைவர் ஆய்வு

தென்காசி, டிச. 6  தென்காசி மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் டிச.8 அன்று வரு வதை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடு கள் மற்றும்  காவல்துறை உயர்  அலுவலர்களுடன் தென் மண்டல  காவல்துறை  தலைவர்  திங்கட் கிழமை அன்று ஆய்வு மேற்கொண் டார். தமிழக முதல்வர் அவர்களின்  வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் இடம் போன்றவை குறித்து தென்மண்டல காவல் துறை தலைவர்  அஸ்ராகார்க் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் உயர் அதிகாரிகள் மற்றும் தனிப்படை காவல்துறை யினருடன் நடந்த ஆய்வுக் கூட்டத் தில்,கொலை சம்பவங்களை தடுக்க எடுக்கப்பட வேண்டிய  முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் குறித்தும்,புலன் விசார ணையில் உள்ள வழக்குகள் குறித்தும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய  நடவடிக்கைகள்  போன்றவை  குறித்தும், போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் கஞ்சா விற்ப னையில் ஈடுபடும் நபர்கள் மீது  கடும் நடவடிக்கை எடுப்பது குறித்தும் காவல்துறை அதிகாரி களுக்கு அறிவுறுத்தினார்.

;