districts

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி, அக். 31 அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் என் எச்எம் ஸ்கீம் - (NHM Schemey) (TAEI, Geriatric, Pain and Palliative Care and CEmONC) - கீழ் ஒப்பளிக்கப்பட்டுள்ள ஒப்பந்த பணியிடங்க ளில் காலியாக உள்ள  ஒப்பந்த பணியிடங்க ளுக்கு ஆண்/ பெண் நபர்களிடமிருந்து தனித்தனியே விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, தொகுப்பூதி யம் மற்றும் கல்வித்தகுதி பின்வருமாறு: 1.ரேடியோ கிராபர் – 2, ரூ.13,300, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி ரேடியோகிராபி/ டிஆர்டிடி (DRTT) / டிஆர்டிடி (DRDT) பட்டம் / சான்றிதழ் தேர்ச்சி / 2.பிசியோதெரபிஸ்ட் ரூ.13,000, பிசியோதெரபி டிகிரி தேர்ச்சி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டச் சான்றிதழ், ரூ.8500, 3.பல்நோக்கு ஹெல்த் வொர்க்கர் ரூ.8500/ 8-ஆம் வகுப்பு தேர்ச்சி, 4.செக்யூரிட்டி கார்டு ரூ.8500/  8-ஆம் வகுப்பு தேர்ச்சி மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் உரிய கல்வி தகுதி தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிலையங்களில் படித்ததற்கான சான்று பெற்றிருக்க வேண்டும். சான்றிதழ்களின் நகல்களுடன் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் (சுநளரஅந) இவ்வலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.  குறிப்பு: 1. மேற்கண்ட பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமாக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 2. அப்பணியிடங்கள் எக்காரணம்கொண்டும் பணிவரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்பட மாட்டாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: முதல்வர் , அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தூத்துக்குடி விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2022 குறிப்பு: நிர்ணயிக்கப்பட்ட 10.11.2022 பிறகு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது. இத்தகவலை மாவட்ட சுகாதார சங்க  தலைவர்/மாவட்ட ஆட்சித்தலைவர்  மரு.கி.செந்தில்ராஜ்   தெரிவித்துள்ளார்.