districts

img

புதுமைப்பெண் திட்ட 2 ஆம் கட்டம் முதல்வர் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி, பிப். 8 தூத்துக்குடி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் 2 ஆம் கட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வழியாக துவக்கி வைத்தார்.  தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து உயா் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 5ம் தேதி தொடக்கி வைத்தார். இதன் மூலமாக தற்போது உயர்கல்வி பயிலும் 1.13 லட்சம் மாணவியர் இந்தத் திட்டத்தில் உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர்.  இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் புதுமைப் பெண் இரண்டாம் கட்ட திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் புதனன்று தொடங்கி வைத்தார். இதை யொட்டி தூத்துக்குடி வ.உ.சி. பொறியியல் கல்லூரி  அண்ணா பல்கலைக்கழக கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில் மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் முன்னி லையில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாணவிக ளுக்கு வங்கி கணக்கு அட்டைகளை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ் குமார், மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி, தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வக்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ், அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி பொறியியல் கல்லூரி புல முதல்வர் சி.பீட்டர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

;