districts

தூத்துக்குடியில் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை அமைச்சர் பெ.கீதாஜீவன் தகவல்

தூத்துக்குடி,அக். 25 தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.1.20 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அவசர அறுவை சிகிச்சை அரங்கத்தினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.செந்தில்ராஜ் தலைமையில் செவ்வாயன்று  திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர் செய்தியா ளர்களிடம் தெரிவித்ததாவது: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் செயல்பட்டு வரும் அவசர சிகிச்சை மையத்தில் ஆண்டுக்கு சுமார் 60,000 பேர் அவசர சிகிச்சைக்காக அனு மதிக்கப்படுகின்றனர். விபத்து, இருதய நோய், பிற காயங்கள், தீ விபத்து, பாம்பு கடித்தல் போன்ற பல்வேறு அவசர சிகிச்சை க்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளில் 80சதவீதம் பேர் குணமாகி செல்கின்றனர். 60 சதவீதம் பேர் உள்நோயாளிகளாக சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.  இதில் சிலருக்கு காலதாமதம் இன்றி  உடனடியாக கூடுதல் சிகிச்சை அளிப்ப தற்காக ஐசியு தேவைப்படுகிறது. சில ருக்கு உடனடியாக அவசர சிகிச்சை தேவை என்பதாலும், அவசர சிகிச்சை க்கு வரும் நோயாளிகளை மேல்தளத்தி ற்கு கொண்டுச் செல்ல தாமதம் ஏற்படுவ தினாலும் இந்த பிரிவில் அறுவை சிகிச்சை மையம் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவற்றை கீழ்தளத்தில் அமைத்திட தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மறு சீரமைப்பு பணியின் கீழ் ரூ.1.20 கோடி மதிப்பில் நவீன வசதியு டன் கூடிய 8 படுக்கைகள் கொண்ட வார்டு, விரிவாக்கம் செய்யப்பட்ட அவசர அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் பணிமருத்துவர் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி மாவட்ட ஏழை எளிய மக்கள் சிறப்பு சிகிச்சைகளுக்காக பிற மாவட்டங்களுக்கு செல்வதை தவிர்ப்ப தற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் ககல்லூரியில் ரூ.131கோடி மதிப்பில் பல் நோக்கு மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது என அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்தார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி ஆட்சியர் கௌரவ் குமார், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவகுமார், உறைவிடம் மருத்து வர் சைலஸ் ஜெபமணி, அவசர சிகிச்சை  பிரிவு தலைவர் ராஜவேல் முருகன், உதவி செயற்பாட்டாளர் (பொதப்பணித்துறை மருத் துவம்) கங்கா, வட்டாட்சியர் செல்வகுமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

;