districts

img

அரசாணை 115ஐ ரத்து செய்ய வேண்டும் அரசு ஊழியர் சங்க மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை கோரிக்கை

தூத்துக்குடி, நவ.20- தமிழ்நாடு அரசு ஊழியர்  சங்க மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் தூத்துக் குடி பாளை ரோட்டில் அமைந் துள்ள தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க வளாகத்தில் உள்ள  தோழர் எம் ஆர் அப்பன்  இல்லத்தில் உள்ள கே.ஆர். சங்கரன் நினைவு அரங்கத் தில் நடைபெற்றது. இப்பேரவை கூட்டத் திற்கு மாவட்டத் தலைவர் செந்தூர் ராஜன் தலைமை  வகித்தார். மகளிர் குழு துணை குழு அமைப்பாளர் மகேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார். மாநில துணைப் பொதுச் செயலாளர் என்.வெங்கடேசன் துவக்கவுரை ஆற்றினார். மாவட்ட செய லாளர் தே. முருகன் வேலை அறிக்கை தாக்கல் செய்தார். மாவட்ட பொருளாளர் மு. தமிழரசன் நிதிநிலை அறிக் கையை சமர்ப்பித்தார். மூட்டா பொதுச் செயலாளர்  நாகராஜன் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு அரசு  ஊழியர் சங்க மாவட்ட  துணைத் தலைவர்கள் மகேந்திர பிரபு, பேச்சியம் மாள், சின்னத்தம்பி அன்புச்  செல்வன், மாவட்ட இணைச் செயலாளர்கள் சாம் டானி யல் ராஜ், உமாதேவி, செல்ல துரை ஆகியோர் தீர்மா னங்களை முன்மொழிந்த னர். மாநில துணைத்தலை வர் கிறிஸ்டோபர் நிறை வுரை ஆற்றினார். நிறைவாக மாநில செயற்குழு உறுப்பி னர் அண்ணாமலை பரம சிவன் நன்றி உரையாற்றி னார்.
தீர்மானங்கள்
புதிய பென்ஷன் திட் டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்  படுத்த வேண்டும், முடக் கப்பட்ட அகவிலை படியை  1.7.2022 முதல் வழங்க வேண்  டும், சரண் விடுப்பு ஒப்ப டைத்தலை மீண்டும் வழங்  கிட வேண்டும், தரப்படுத்தப் படாத ஊதிய விகிதங்களில் கீழ் பணியாற்றி வரும் சத்  துணவு ஊழியர்கள், அங்கன்  வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், எம்ஆர்பி செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தரப்படுத்தப்பட்ட ஊதிய  ஏற்ற முறையுடன் கூடிய வரையறுக்கப்பட்ட ஊதி யம், ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து பயன்களையும் வழங்கிட வேண்டும், முன் னோடி திட்டமான தமிழக  முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ஏற்க னவே உள்ள சத்துணவு ஊழி யர்களை கொண்டு நடத்தி டவும், அனைத்து பள்ளி களுக்கும் விரிவு படுத்திட வும் தமிழக அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும், தமிழக அரசால் வெளியிடப் பட்டுள்ள அரசாணை 115ஐ ரத்து செய்ய வேண்டும், மக்கள் தொகை மற்றும் தொழிற்சாலை மிகுந்த தொழில் நகரமாக விளங்கு வதால் தூத்துக்குடி- சென்  னைக்கு கூடுதல் ரயில் இயக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

;