districts

img

தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி: ஜார்கண்ட் அணியிடம் படுதோல்வியடைந்தது தமிழ்நாடு

தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டியில் தமிழக அணி ஜார்க்கண்ட் அணியிடம் படுதோல்வியடைந்தது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்தரை ஹாக்கி மைதானத்தில், கடந்த 17-ஆம் தேதி முதல் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பில், 12-ஆவது தேசிய ஜூனியர் ஆண்கள் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 4-ஆவது நாளான இன்று காலை நடைபெற்ற முதல் போட்டியில் தமிழ்நாடு மற்றும் ஜார்கண்ட் வீரர்கள் சிறப்பாக விளையாடி தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை கோலாக மாற்றினர்.

ஆட்டத்தின் இறுதியில் 7-1 என்ற கோல்கணக்கில் ஜார்கண்ட் அணி வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து நடைபெற்ற 2-ஆவது போட்டியில் சதிஷ்கர் மற்றும் கோவா அணிகள் மோதி கொண்டனர். போட்டி தொடங்கியது முதல் சிறப்பாக விளையாடிய சதிஷ்கர் அணி வீரர்கள் அடுத்தடுத்து கோல்களை அடித்து தங்களது அணிக்கு வெற்றியை தேடித்தந்தனர். போட்டியின் இறுதியில் 9-0 என்ற கோல்கணக்கில் சதிஷ்கர் அணி வெற்றி பெற்றது.

;