districts

தூத்துக்குடியில் குருத்தோலை பவனி

தூத்துக்குடி, ஏப்.10- தூத்துக்குடியில் தேவாலயங்களில் நடைபெற்ற குருத்தோலை பவனியில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.  இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் உலகம் முழு வதும் உள்ள கிறிஸ்தவர்களால் 40 நாள் தவக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தவக்காலத்தின் முடிவில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும். தவக்காலத்தின் போது பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். அதன் பகுதியாக குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது.  இதனை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பழைமை வாய்ந்த திரு இருதய ஆலயத்தில் குருத்தோலை பவனி நடந்தது. இதில் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அண்டனி, முன்னாள் ஆயர் இவான் அம்புரோஸ், பங்குத்தந்தை ரோலிங்ட்டன் மற்றும் சிறுவர், சிறுமிகள் உட்பட திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு கையில் குருத்தோலைகளை ஏந்தியபடி வீதிகளில் வலம் வந்தனர்.  தூத்துக்குடியில் லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் இன்று குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. லூர்தம்மாள்புரம் கிழக்குப் பகுதி யில் அமைந்துள்ள அருள்தந்தை பவுல் அலங்காரம் சுவாமி திருவுருவம் கேபி முன்பு இருந்து பங்குத்தந்தை ஆன்டனி ப்ரூனோ தலைமையில் குருத்தோலையை கையில் பிடித்தவாறு பவனியாக ஆலயத்துக்கு வந்த னர். பின்னர் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டனர். இதைப்போல் தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா பேராலயம், அந்தோணியார் கோவில் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் குருத் தோலை பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

;