districts

img

அறிவியல் இயக்கத்தின் தேசிய மாநாட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்களின் ஆய்வறிக்கை தேர்வு

திருவாரூர், டிச.18 -  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையும், தேசிய அறிவியல் பரிமாற்ற குழு மமும் இணைந்து, பள்ளி மாணவர் களை ஊக்கப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான மைய கருப் பொருளான “ஆரோக்கியம் மற்றும்  நல் வாழ்விற்கான சுற்றுச்சூழல் அமைப்பை புரிந்து கொள்வது”, ‘ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக் கான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள்’ என்ற உபதலைப்பில் கோட்டூர் - செருவா மணி அரசு உயர்நிலைப் பள்ளி அறிவி யல் பட்டதாரி ஆசிரியர் க.அன்பழகன் வழிகாட்டியாக செயல்பட்டார். இவரது வழிகாட்டுதலோடு 9 வகுப்பு  மாணவர்களான தெ.சுதர்சன், கோ. கீர்த்திவாசன் ஆகியோர் திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில் உள்ள செருவாமணி மற்றும் ராமநாத புரம் கிராமங்களில் “நெல் அறுவடை யில் விவசாயியின் மீளா துயரமும்,  அதற்கான தீர்வும்” என்ற ஆய்வ றிக்கை டிசம்பர் 10,11 தேதிகளில் தூத்துக் குடியில் நடைபெற்ற மாநில அளவி லான மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. சமர்ப்பிக்கப்பட்ட 550 ஆய்வுக் கட்டு ரைகளில், இந்த மாணவர்கள் சமர்ப்பித்த ஆய்வு கட்டுரையும் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அகில இந்திய அளவில் ஜனவரி மாதம் குஜ ராத்தில் உள்ள அகமதாபாத்தில் நடை பெற உள்ள தேசிய மாநாட்டில் மாண வர்களின் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப் பட உள்ளது. இதனையறிந்த மாவட்ட ஆட்சியர்  ப.காயத்ரி கிருஷ்ணன், மாணவர் களை நேரில் அழைத்து  பாராட்டி, சான்றி தழ் வழங்கினார். மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் இ.மாதவன், பள்ளி யின் தலைமை ஆசிரியர் தமிழ்நாடு  அறிவியல் இயக்கத்தின் மாநில செய லாளர் எம்.எஸ்.ஸ்டீபன்நாதன், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெ.சுகுமாரன், மாநில துணைத் தலைவர் வ.சேதுராமன், மாவட்ட நிர்வாகிகள்  மாணவர்களுக்கு பாராட்டு  தெரிவித்தனர்.

;