districts

தியாகராஜர் கோவில் தெப்பத் திருவிழா நாளை நிறைவு

திருவாரூர், மே 20 - பிரசித்தி பெற்ற தியாகரஜர் திருக்கோவில் தெப்பத் திருவிழா மே 20  (வெள்ளிக்கிழமை) தொடங்கி மே 22 (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறு கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்கான கூட்டம்  சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் தலைமையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் தெப்பத் திருவிழாவை சிறப்பாக நடத்தும் வகையில்  துறை வாரியாக பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, காவல்துறை நகருக்குள்ளும் திருக்கோவிலிலும் கமலாலய குளக்கரை களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க வேண்டும். நகராட்சி துறை தெப்பத் திருவிழாவின் முன்னும் பின்னும் இரண்டு நாட்கள் கூடுதலாக தண்ணீர் வழங்குவது மற்றும் தற்காலிக கழிப்பறைகள் அமைத்து கூடுதல்  பணியாளர்களை கொண்டு சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.  தீயணைப்பு துறை நீச்சல் வீரகள் அடங்கிய படகோடு தெப்பக்குளத்தில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். பொதுப்பணித்துறை தெப்பம் கட்டு மானப் பணிகளை உறுதி செய்ய வேண்டும். மின்சாரத்துறை சீரான தடை யில்லா மின்சாரம் வழங்க வேண்டும். மருத்துவத்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பணியில் ஈடு படுத்துவதோடு 24 மணி நேர அவசர ஊர்தியையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அனைத்துத் துறையினரும் விழாவை சிறப்பாக நடத்த ஒத்துழைக்க வேண்டுமென சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

;