districts

img

பாரதிதாசன் பல்கலை.,க்கு இடையே விளையாட்டுப் போட்டிகள்

மன்னார்குடி, ஜன.7- திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு கலைக்கல்லூரியில் வெள்ளி யன்று (ஜன.6) பாரதிதாசன் பல்கலை., க்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையே யான விளையாட்டுப் போட்டிகள் துவங்கின. மூன்று நாட்கள் நடைபெறும்  போட்டிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொள்கின்றனர்.  போட்டிகளை மன்னார்குடி அரசினர் கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் டி.ராஜேந்திரனும், வேதியியல் துறை  தலைவர் முனைவர் எஸ்.ரவி ஆகி யோர் துவக்கி வைத்தனர்.  பாரதிதாசன் பல்கலை., விளையாட் டுத் துறை தலைவர்  முனைவர் ஆர். காளிதாசன், பாரதிதாசன் பல்கலை., சிண்டிகேட் உறுப்பினர் முனைவர் வி.சுவாமிநாதன், துறை தலைவர் எஸ்.ராமு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  முதல் நாளன்று பெண்களுக்கான பளு மற்றும் வலு தூக்கும் போட்டிகள் நடைபெற்றன. இதில் 50-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவியர்கள் கலந்து கொண்டனர். இரண்டாம் நாள் ஆண்களுக்கான பளு மற்றும் வலு தூக்கும் போட்டிகள் நடைபெற்றன. இதில், உடல் எடை பிரிவுகளில் வெற்றி  பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.