districts

img

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்கிடுக! தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆட்சியரிடம் மனு

திருவாரூர், பிப்.6-  திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு  பெய்த பருவம் தப்பிய மழையால் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி  நெல் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் நிவாரணம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி  தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டக் குழு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டத்தலைவர் எஸ்.தம்பு சாமி, செயலாளர் எம்.சேகர், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி ஆகியோர் மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தனர். பருவம் தவறிய தொடர் மழை யால் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர் மற்றும் நன்னி லம், குடவாசல், வலங்கைமான், கொரடாச்சேரி, மன்னார்குடி, கோட்  டூர், நீடாமங்கலம், முத்துப் பேட்டை, திருத்துறைப்பூண்டி என  மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சம்பா, தாளடி நெல் பயிர்கள் அறுவடைக்கு தயா ராக இருந்த நிலையில், 1 லட்சம்  ஹெக்டேர் பயிர்கள் திடீர் மழை யால் மழை நீரில் மூழ்கின.  இதனை அடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுபடி அமைச் சர்கள் தலைமையில் வேளாண் துறை மற்றும் வருவாய் துறையினர் ஆய்வு செய்து பயிர் சேதங்களை கணக்கிட்டு வழங்கியுள்ளனர்.  இது வரவேற்கத்தக்கதாக இருந்  தாலும், உளுந்து பயிர் அடித்து  முளைத்திருந்த நிலையில் ஊடு பயிர்கள் அழுகி சேதமடைந்துள் ளது. நெல் பயிர்கள் பசுமையாக அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், தண்ணீரை மூழ்கி கிடப்பதால் முளைக்கும் அபாயம் உள்ளது. அறுவடை செய்த நெல்லை நேரடி நெல் கொள்முத லில் மூட்டையாகவும், குவித்தும் வைக்கப்பட்ட நிலையில் நெல் உள்ளது.  எனவே, விவசாயிகளை பாது காக்க ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயி ரம் நிவாரணம் வழங்கிட வேண்டும், ஈரப்பதத்தை கணக்கிடாமல் நெல்லை கொள்முதல் செய்திட  வேண்டும் என வலியுறுத்தப்பட் டுள்ளது.

;