districts

img

பாரம்பரிய உயர்தர உள்ளூர் இரகங்களின் உற்பத்தி பொருட்காட்சி

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் அம்மையப்பன் பகுதியில் அமைந்துள்ள பாரத் கல்வியியல் கல்லூரியில் பாரம்பரிய உயர்தர உள்ளூர் இரகங்களின் உற்பத்தி பொருட்காட்சி நடைபெற்றது. ஆட்சியர் சாருஸ்ரீ, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கலைவாணன், வேளாண்மை இணை இயக்குநர் லட்சுமி காந்தன், பாரத் கல்வி குழுமத்தின் தாளாளர் காலை கதிரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கண்காட்சியில் பாரம்பரிய கருப்பு கவுனி, கருங்குருவை, மாப்பிள்ளை சம்பா, கிச்சிலி சம்பா, தூய மல்லி உள்ளிட்ட நெல் வகைகள் காட்சிப்படுத்தப்பட்டன.