districts

முன்கூட்டியே தண்ணீர் திறப்பு குறுவை சாகுபடியை திட்டமிட்டு துவக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவாரூர், மே 30 - ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடி பாசனத்திற்கு ஜூன்  12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும். நடப்பாண் டில் முன்கூட்டியே காவிரி டெல்டா பகுதி களில் குறுவை சாகுபடிக்காக மே 24 அன்று மேட்டூர் அணையை முதல்வர் திறந்து வைத் தார். மேலும், கல்லணையிலிருந்து குறுவை  சாகுபடி பாசனத்திற்கு மே 27 அன்று தண்ணீர்  திறக்கப்பட்டுள்ளது.  இதனை விவசாயிகள் பயன்படுத்தி திரு வாரூர் மாவட்டத்தில் இருமடங்கு குறுவை  சாகுபடி செய்ய கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். வாய்ப்புள்ள விவசாயிகள் சமு தாய நாற்றாங்கால் விதைப்பு செய்து பிற விவ சாயிகளுக்கு நாற்றுகள் வழங்கிட வேண்டும். செம்மை நெல் சாகுபடி முறையில் சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள் நாற்றங்கால் பணியை துரிதப்படுத்தவும், இயல்பான நடவு முறையில் சாகுபடி செய்ய உத்தேசித்துள்ள விவசாயிகள் நாற்றங்கால் பணியினை விரை வில் தொடங்க வேண்டும். குறுவை சாகுபடி செய்ய இயலாத விவ சாயிகள் உளுந்து மற்றும் மக்காச்சோளம் போன்ற பயிர்களை சாகுபடி செய்யலாம். இறவை பயிராக உளுந்தினை சாகுபடி செய்யும் போது, ஹெக்டேர் ஒன்றுக்கு 700  முதல் 800 கிலோ மகசூல் எடுக்க வாய்ப்புள்ளது.  மேலும், மண் வளத்தினை பாதுகாத்திட குறுவை சாகுபடி செய்யாத இடங்களில் பசுந்தாள் பயிரினை விவசாயிகள் சாகுபடி செய்யலாம். குறுவை சாகுபடி பரப்பு நடப்பாண்டில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் சூழ லில் விவசாயிகள் குறுவை பயிருக்கு தேவை யான அளவு மட்டுமே வேளாண்துறையின்  பரிந்துரையின் அடிப்படையில் ரசாயன  உரங்களை பயன்படுத்தலாம் என மாவட்ட  ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

;