districts

கீழவிடையல் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம்

வலங்கைமான், செப்.28 - திருவாரூர் மாவட்டம் வலங்கை மானை அடுத்த கீழவிடையல் வருவாய்  கிராமத்தில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் 187 பயனாளி களுக்கு ரூ.29,00,069 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கீழவிடையல் வருவாய் கிரா மத்தில், கண்டியூர், மேலவிடையல், கீழ  விடையல் ஆகிய வருவாய் கிராமங் களுக்கான மக்கள் தொடர்பு முகா மிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் தலைமை வகித்தார். வலங் கைமான் திமுக மேற்கு ஒன்றிய செய லாளர் அன்பரசன், கிழக்கு ஒன்றிய செய லாளர் தெட்சிணாமூர்த்தி, ஆர்டிஓ சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்த னர். முகாமில் வேளாண்மைத் துறை,  தோட்டக்கலைத்துறை, கால்நடை துறை, சுகாதாரத் துறை உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்தோர், தங்கள் துறையின் மூலம் செயல்படுத் தும் திட்டங்கள் குறித்து விளக்கி பேசி னர். பொதுமக்களிடமிருந்து முதியோர்  உதவித் தொகை, விதவை உதவித் தொகை, விலையில்லா வீட்டுமனைப் பட்டா உள்ளிட்டவை தொடர்பாக 328 மனுக்கள் வரப்பட்டன. அவற்றில் 187  மனுக்களுக்கு உடனடி தீர்வு காணும் வகையில், வீட்டுமனைப் பட்டா ரூ.20,80  096 மதிபீட்டில் பயனாளிகளுக்கும், ரூ.83 ஆயிரம் மதிப்பீட்டில் 83 பயனா ளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக் கான ஆணைகள் வழங்கப்பட்டன. முன்னதாக தோட்டக்கலைத் துறை,  வேளாண்மைத் துறை, கால்நடைத் துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகிய துறைகள்  சார்பில் அரங்குகள்  அமைக்கப்பட்டி ருந்தன. வலங்கைமான் வட்டாட்சியர் சந்தான கோபாலகிருஷ்ணன் நன்றி கூறி னார்.

;