districts

சிபிஎம் சாலை மறியல் போராட்டம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு: தற்காலிகமாக ஒத்திவைப்பு

குடவாசல், நவ.21-  திருவாரூர் மாவட்டம் நன்னிலம் நெடுங் குளம் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மேல்  நிலைப் பள்ளியில் உள்ள பல்வேறு சீர்கேடு களை கண்டித்து திங்களன்று சாலை மறியல் ஆர்ப்பாட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நன்னிலம் ஒன்றியச் செயலாளர் கே.எம்.லிங்கம் தலைமையில், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தியாகு ரஜினிகாந்த், ஆர். சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடை பெறும் என அறிவிக்கப்பட்டு ஆதிதிராவிட நல  பள்ளி வாயில் முன்பு போராட்டக்காரர்கள் குவிந்தனர். நெடுங்குளம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியின் தற்காலிக மாணவியர் விடுதிக்கான கழிவறை கட்ட அதீதமாக மதிப் பிட்டு மோசடியாக ஒப்பந்தம் பெற்று கட்டி வரும்  ஒப்பந்ததாரர் துரை.மாணிக்கம் மற்றும் மோசடிக்கு துணைபோகும் ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், பழைய மாணவியர் விடுதியை இடித்துவிட்டு  புதிய விடுதி கட்டிடம் கட்ட வேண்டும், பள்ளி வளா கத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றி மாணவர்களை நோய்த் தொற்றிலிருந்தும் பள்ளி கட்டிடங்களை பாதிப்பிலிருந்தும் பாது காக்க வேண்டும், மாணவ, மாணவியர்களுக் கான கழிவறைகளை தூய்மைப்படுத்திடவும் அதற்கான நிரந்தரப் பணியாளரை நியமித்திட வும், ஆரம்பப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டவும் புதிய மாணவியர் விடுதி கட்டவும் ஆதி திராவிடர் நலத்துறையின் அனுமதி பெற்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், அதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை தாமதிக்காமல் வெளியிட்டு பணி களை உடனடியாக துவங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு சாலை மறியல் போராட்டம்  அறிவிக்கப்பட்டி ருந்தது. இந்த நிலையில் சாலை மறியல் போராட்டத்தை அறிந்து விரைந்து வந்த அதி காரிகள் சிபிஎம் தலைவர்களிடம் நடத்திய பேச்சு வார்த்தையில், உடனடியாக அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாகவும், தற்சமயம் செய்ய வேண்டிய  உடனடி பணிகளை துவங்கியதால் சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. போராட்டக் களத்தில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் எம்.சேகர், எம்.கலைமணி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி.வீரபாண்டியன், ஜெ.முகமது உதுமான், கே. தமிழ்ச்செல்வி, எஸ்.எம்.சலாவுதீன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.