districts

ரூ.1.35 கோடியை மோசடி செய்த பைனான்சியர் எஸ்.நடராஜன் தலைமறைவு காவல்துறை தீவிர தேடுதல்

திருவாரூர், மார்ச் 9 - திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம், எடையூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும்  எஸ்.பி.ஆர்.ஏஜென்சி என்ற பெட்ரோல் பங்கை விற்பனை செய்வதாக கூறி 1.35 கோடி ரூபாய் பணத்தைப் பெற்று மோசடி செய்து ஏமாற்றிய திருத்துறைப்பூண்டி நகரில் வசித்து வரும் பைனான்சியர் எஸ்.என்.ஆர்.  என்கின்ற எஸ்.நடராஜன், மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு பயந்து தலை மறைவாகியுள்ளார். கடந்த 10 தினங்களுக்கும் மேலாக காவல்து றையை ஏமாற்றி வரும் அவரை பிடிப்பதற்கு மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் சி.விஜயகுமாரின் உத்தரவின்  பேரில் தனிப்படை காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.  கடந்த 1.7.2018 அன்று திருத்துறைப்பூண்டி வட்டம்,  நெடும்பலம் ஊராட்சியில் வசித்து வரும் ஆர்.முரு கானந்தம் என்பவரை அணுகி திருத்துறைப்பூண்டி வட்டம், எடையூர் ஊராட்சியில் பெட்ரோல் பங்க் நடத்தி  வந்த பி.வைகுண்டம் மற்றும் அவரது மகன் வை.பரணி ஆகியோரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். பின்னர் ரூ. 1.35 கோடிக்கு கிரயம் பேசி இடைத்தர கராக செயல்பட்ட வட்டித் தொழில் செய்து வரும் எஸ். நடராஜன் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டார். இவருக்கு உடந்தையாக பி.வைகுண்டம் மற்றும்  வை.பரணி ஆகியோர் செயல்பட்டு, முருகானந்தத்தை மிரட்டி பெட்ரோல் பங்கை கைப்பற்றிக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து, பறிகொடுத்த பணத்தை திரும்ப பெறுவதற்காக ஆர்.முருகானந்தம் பல முயற்சி களில் ஈடுபட்டு வருகிறார். மாவட்ட குற்றவியல் நீதி மன்றத்தின் மூலம் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்  பதிவு செய்ய உத்தரவு பெற்றார். மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையின் அலட்சியத்தால் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் ஒருவர் பின் ஒருவராக சென்னை உயர்நீதி மன்றத்தில் பொய்யான காரணங்களைக் கூறி கைது நட வடிக்கையில் இருந்து தப்பித்து விட்டனர்.

சென்னை உயர்நீதிமன்றம்
இதன் காரணமாக பணத்தை பறி கொடுத்த ஆர். முருகானந்தம், சென்னை உயர்நீதிமன்றத்தில் அணுகி,  அவர்களது முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரியும், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க திருவாரூர்  மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிடக் கோரியும் வழக்கு  தொடுத்தார். அதன்பேரில் விசாரணை நடைபெற்று கடந்த 27.2.2022 அன்று சென்னை உயர்நீதிமன்றம் மோசடி செய்த முக்கிய நபரான எஸ்.என்.ஆர் என்கிற எஸ்.நடராஜனின் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது. தற்போது கைது நடவடிக்கையை தவிர்ப்பதற் காக எஸ்.நடராஜனும் ஏனைய இருவரும் தலைமறை வாகிவிட்டனர். தொடர்ந்து நடவடிக்கையை துரித படுத்தக் கோரி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையி னரை அணுகினாலும், அவர்கள் என்ன காரணத்தி னாலோ கைது நடவடிக்கையை தாமதப்படுத்து கிறார்கள். இதனால் 7.3.2022 (திங்கட்கிழமை) திருவா ரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.விஜய குமாரை மீண்டும் சந்தித்து துரித நடவடிக்கை கோரியும்,  மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையின் செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்தும், ஆர்.முருகானந்தம் புகார் மனு அளித்தார்.  இதன்பேரில் இந்த வழக்கின் போக்கு குறித்து முழுமையாக விசாரித்த காவல் கண்காணிப்பாளர் தீவிர தேடுதல் வேட்டைக்கு உத்தரவிட்டுள்ளார். இரண்டு நாட்களுக்குள் தலைமறைவாகியுள்ள நடராஜனை கைது செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.

;