districts

img

சிறுவனை கடித்து குதறிய வேட்டை நாய்

திருவள்ளூர், செப் 20- சோழவரம் அடுத்த எம்.ஜி.ஆர் நகரில் 8 வயது சிறுவனை வேட்டை நாய்கள் கடித்ததால் காயமடைந்தார். இது குறித்து நாய்களின் உரி மையாளர் மீது  நடவடிக்கை எடுக்கக்கோரி சோழவரம் காவல் நிலையம் எதிரில் உறவினர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த எம்.ஜி.ஆர் நகரில் வசிப்பவர் தாஸ்.இவரது எட்டு வயது மகன் மௌனிஷ் குமார் அங்குள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.தாயை இழந்து பாட்டியின் அரவணைப்பில் வாழும் மாணவன் மௌனிஸ்குமார் பள்ளிக்கு செல்ல தயாராகிக் கொண்டி ருந்த போது சிறுநீர் கழிப்ப தற்காக செவ்வாயன்று (செப் 20) எம்ஜிஆர் நகரில் உள்ள தனது வீட்டருகே வெட்ட வெளிக்கு சென்றுள் ளார். அங்கு இயங்கி வரும் பன்றி பண்ணையில் பன்றி களை மேய்ப்பதற்காக 20க்கும் மேற்பட்ட வேட்டை நாய்கள் வளர்க்கப் படுகின்றன. இந்த நாய்கள் மௌலிஷ் குமாரை கண்ட வுடன் திடீரென சூழ்ந்து கடித்து குதற ஆரம்பித்தது.  இதனால் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்த மௌலிஸ் குமாரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து நாய்களை விரட்டி மாணவனை மீட்டு பொன்னேரி அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக கூட்டி வந்தனர். அங்கு குழந்தை மௌலிஸ் குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சோழவரம் காவல் நிலையத்தில் மாண வனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். மேலும் பன்றி மேய்க்கும் வேட்டை நாய்களையும் பன்றி களையும் அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து ஏற்கனவே பல முறை புகார் அளித்தும் ஆர்ப்பாட்டம் செய்தும் இது வரை எந்த ஒரு நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை என உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர். பன்றி பண்ணையின் உரிமை யாளருக்கு அரசு அதி காரிகளும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் துணை போவதாகவும், இந்த குழந்தையை போன்று பலரும் இதனால் பாதிக்கப் படுவார்கள் எனவும் இது தொடர்ந்தால் இதுகுறித்து கிராம மக்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

;